தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

 anbil-mahesh-minister2-1627363221

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று முடிவு செய்யவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. ஆன்லைன் மூலமாக மட்டும் வகுப்புகள் நடைபெற்றன.

அதேநேரம், நோய் பரவல் குறைந்ததால், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் திறப்பு

இருப்பினும் ஆங்காங்கு பள்ளிகளில் கொரோனா பரவுவதாக செய்திகள் பதிவாகியுள்ளன. அதுபோன்ற பள்ளிகள் 1 வாரம் மூடப்படுகின்றன. சானிடைசர் தெளித்து சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பள்ளிகள் இயங்குகின்றன. இந்த அனுபவத்தை வைத்து, அடுத்ததாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க தமிழக கல்வித் துறை திட்டம் வைத்துள்ளது.

கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை

இதையொட்டி, பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்றது. 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி பள்ளிகளை திறந்தால் ஏர்படும் சவால்கள் குறித்து அப்போது ஆய்வு மேற்கொண்டது.

முடிவு இல்லை

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் சுழற்சி முறையில்தான் நடத்தப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive