திருக்குறள் :
அதிகாரம்- 39 இறைமாட்சி .
குறள் எண்:386
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
பொருள்: காட்சிக்கு எளிமையும் கடுஞ்சொல் கூறாத இனிய பண்பும் உடைய அரசரை உலகம் புகழும்.
பழமொழி :
Love thy neighbour as thyself.
உன்னைப் போலவே பிறரை நேசி.
இரண்டொழுக்க பண்புகள் :
1. தனக்கென்று நீர் வைத்துக் கொள்ளாத ஆறு, கல்லெறி பட்டாலும் பழம் தரும் மரங்கள்.
2. இவை எனக்கு கற்றுத் தருவது சுயநலமில்லாத வாழ்க்கை
பொன்மொழி :
நம் கடமையைச் செய்ய இரவும் பகலும் ஒன்றெனக் கொண்டால் நன்மையும் இன்பமும் நமக்கானதாக அமையும் .---- ரமண மகரிஷி
பொது அறிவு :
1.சுற்றுச்சூழல் மேலாண்மைக்காக ஆசியாவில் ISO 14001-2004 சான்றிதழ் பெற்ற முதல் நகரம் எது?
நாமக்கல்.
2.இந்தியாவின் மிக உயரமான காற்று சுத்திகரிப்பு கோபுரம் எந்த நகரத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
சண்டிகர்.
English words & meanings :
Earn your bread - work for your food
Bite the hand that feeds you - harm the people that helped you
ஆரோக்ய வாழ்வு :
*உடல் எடை குறைய சில டிப்ஸ்*
1)நீர் - தண்ணீர் உடலுக்கு நீரூட்டும். தண்ணீர் குடித்தால் பசி குறையும், மெடபாலிசம் அதிகரிக்கும்.
2)புரதச்சத்து மிகுந்த உணவு : உணவில் புரதச்சத்து அதிகம் சேர்த்துக்கொண்டால் மெடபாலிசம் அதிகரிப்பதோடு, தசைகள்வலுவாகி, உடல் எடை குறைய உதவும்.
3) தயிர் : புரதச்சத்து அதிகம் உள்ள தயிர் மெடபாலிசம் அதிகரிக்க உதவும்.
4)தேங்காய் எண்ணெய் : கொழுப்பை குறைக்கவும், மெடபாலிசம் அதிகரிக்கவும் தேங்காய் எண்ணெய் உதவும்.
கணினி யுகம் :
Ctrl + U - Underline highlighted selection.
Ctrl + Y - Redo
செப்டம்பர் 16:
கி. ராஜநாராயணன் அவர்களின் பிறந்தநாள்
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 – 17 மே 2021),கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர்.1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
ஒமர் முக்தார் அவர்களின் நினைவுநாள்
ஒமர் முக்தார் (Omar Mukhtar, 1858 - செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.
நீதிக்கதை
ஆந்தை பெற்ற சாபம்
கற்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன. ஆந்தைக் குஞ்சுகள் வளர வளர அம்மாவிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தன. ஒரு நாள், ஒரு ஆந்தைக்குஞ்சு அம்மா எல்லோரும் பகலில் தான் உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் பகலில் தூங்கிவிட்டு இரவில் இரை தேடுகிறோம். இது ஏன்? என்றது.
நமக்கு பகலில் கண் தெரியாது. இரவில் தான் கண் தெரியும். அதனால் தான் நாம் பகலெல்லாம் துங்கிவிட்டு இரவில் சென்று இரை தேடுகிறோம் என்றது தாய் ஆந்தை. ஏன் கடவுள் நம்மை மட்டும் இப்படி படைத்தார்? என்று கேட்டது இன்னொரு ஆந்தை குஞ்சு. கடவுள் மேல் தவறில்லை. முன்னொரு காலத்தில் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் செய்த தவறைத்தான் நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றது தாய் ஆந்தை. அப்படி என்ன தவறு செய்தார்? என்று கேட்டன குஞ்சுகள்.
ஒரு முறை நம் முன்னோர் ஒருவர் காகத்திடம் நட்பாக இருந்தார். ஒரு நாள் அந்த காகத்திற்கு உடல்நிலை சரியில்லை. அதனால், காட்டில் டாக்டராக இருந்த குயில் டாக்டரிடம் காக்காவிற்கு வைத்தியம் பார்த்து குணமாகிவிட்டது. அதன் பிறகு டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும் இல்லையா? ஆனால், இவர்கள் எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடிவந்துவிட்டனர்.
அதன் பிறகு இவர்கள் இருவரையும் பார்க்கும்பொழுதெல்லாம் பணம் கேட்க ஆரம்பித்தது குயில் டாக்டர். குயில் டாக்டருக்கு பயந்து நம்முடைய பாட்டனாரான ஆந்தையார், பகலில் தலைகாட்டாமல் நன்றாக தூங்கிவிட்டு இரவில் எழுந்து வெளியே செல்வார். இப்படியே இருந்ததால் குயில் டாக்டரால் ஆந்தையாரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கோபமடைந்த குயில் டாக்டர், காக்காவை பிடித்து நன்கு திட்டி இனிமேல் எங்கள் இனத்தார் இடும் முட்டைகளை எல்லாம் உன் இனத்தார் தான் காவல் காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது.
அன்றிலிருந்து குயில் இனத்தார் முட்டைகளை காக்கை இனம் வளர்த்து கொண்டு வருகிறது. நம்முடைய இனத்தார் பகலில் தூங்கி தூங்கியே நமக்கு பகலில் கண் தெரியாமல் போய்விட்டது என்றது தாய் ஆந்தை. அம்மா பிறரை ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம் காலம் காலமாக பலரை பாதிப்பதை புரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் ஒருநாளும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யவே மாட்டோம், என்றது அந்த இரு ஆந்தைக்குஞ்சுகள். செல்லமாக தன் குஞ்சுகளை அணைத்து முத்தமிட்டது தாய் ஆந்தை.
நீதி :
பிறரை ஏமாற்றினால் நமக்கு தண்டனை தானாக வந்து சேரும்.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...