பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.09.21

   

திருக்குறள் :

அதிகாரம்:ஒப்புரவு அறிதல்

திருக்குறள்: 214

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

விளக்கம்:

ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

பழமொழி :

Measure thrice before you cut once

ஒரு செயலை செய்யும் முன் பலமுறை யோசி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தனக்கென்று நீர் வைத்துக் கொள்ளாத ஆறு, கல்லெறி பட்டாலும் பழம் தரும் மரங்கள்.

 2. இவை எனக்கு கற்றுத் தருவது சுயநலமில்லாத வாழ்க்கை

பொன்மொழி :

முன்பின் அறியாத இடத்திற்கு செல்வதற்கு பலர் சொல்கிறபடி கேட்டுச் சென்றால் வழி தடுமாறிப் போவோம்.------ராமகிருஷ்ண பரமஹம்சர்

பொது அறிவு :

1.மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்தின் பெரிய மாவட்டம் எது? 

சென்னை மாவட்டம்.

2.பரப்பளவு அடிப்படையில் தமிழகத்தின் பெரிய மாவட்டம் எது? 

விழுப்புரம்.


English words & meanings :

Wind - the natural movement of air

Wind - move in a series of twists and turns

ஆரோக்ய வாழ்வு :

பாதவெடிப்பு நீங்க சில டிப்ஸ்

1)வாழைப்பழம்: வைட்டமின் ஏ உள்ள வாழைப்பழம் சருமத்தின் நீளும் தன்மையை மற்றும் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும். வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவலாம்.


2)தேன்: இயற்கையான கிருமிநாசினியாக தேன் செயல்படுகிறது. பாதவெடிப்பை குணமாக்க உதவுவதோடு, சருமத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. தேன் கலந்த வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊறவைத்து 20 நிமிடங்கள் கழித்து அலம்பவும்.


3)வாஸ்லின், எலுமிச்சை: வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் கூட்ட வாஸ்லின் உதவும். புதிய சரும அணுக்கள் உற்பத்தியாக எலுமிச்சை சாறு உதவும். இரவில் வாஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து பாதங்களில் தடவி, உடற்சூடு வெளியேறாமல் தடுக்க கம்பளியால் ஆன காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்தவுடன் பாதங்களை கழுவி விடவும்.


4)கற்றாழை: இரவில் கற்றாழையைப் பாதங்களில் தடவி, காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்து பாதங்களை கழுவவும். தொடர்ந்து 4-5 நாட்கள் இப்படி செய்து வர, வறண்ட பாதங்கள் மிருதுவாகும்.


5)மவுத்வாஷ்: ஆல்கஹால் இருப்பதால் கால்நகங்களை சுத்தப்படுத்த மவுத்வாஷ் உதவும். வறண்ட சருமத்தை மிருதுவாக்கவும் உதவும். நீரில் மவுத்வாஷை கலந்து, அக்கலவையில் 15-20 நிமிடங்கள் பாதங்களை ஊறவைக்கவும். பிறகு pumice stone எனப்படும் நுரைக்கல் கொண்டு இறந்த சரும அணுக்களை அகற்றலாம்.

கணினி யுகம் :

Ctrl + M - Indent the paragraph. 

Ctrl + T - Hanging indent

செப்டம்பர் 18 :

ரொனால்டோ அவர்களின் பிந்தநாள் 

ரொனால்டோ லூயிஸ் நசாரியோ டே லிமா (பிறப்பு: 22 செப்டம்பர் 1976), பொதுவாக ரொனால்டோ (Ronaldo) என அழைக்கப்படுகிறார், இவர் பிரேசிலைச் சேர்ந்த முழுநேரக் காற்பந்தாட்ட வீரர் ஆவார். ரொனால்டோ 1996, 1997 மற்றும் 2002 ஆகிய மூன்று ஆண்டுகளில் அந்தந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான FIFA விருதை வென்றார்.


நீதிக்கதை

பஞ்சவர்ண கிளி

நீண்ட காலத்திற்கு முன்னர் உலகத்தில் பறவைகள் இருந்தன. ஆனால், அவை எல்லாம் ஒரேமாதிரி சாம்பல் நிற வண்ணத்தில் இருந்தன. ஒரு வசந்த காலத்தில், பறவைகளின் அரசன் பறவைகளுக்கு அழைப்பு விடுத்ததை அறிந்து எல்லாப் பறவைகளும் அரசன் முன்னால் கூடின. கூட்டமாக கூடி வந்த பறவைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பி மகிழ்ந்தன. சில பறவைகள் சில மீட்டர் வரை பறந்தன. சில தத்தி தத்தி நடந்தன. சில நொண்டிச் செல்வது போல் நகர்ந்தன. அவைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன. 

அரசப்பறவை, ஓர் இறக்கையை வானத்தை நோக்கி திருப்பியது. வானத்தில் ஒரு பெரிய வானவில் தோன்றின. உடனே எல்லா பறவைகளும் வானத்திலுள்ள வண்ணங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டன. ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், காவி, சிவப்பு என்று அவைகள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தன. ஓர் அழகான பெரிய வானவில்லை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு நிறத்தைக் கொடுக்கப்போகிறேன். உங்களுக்கு எந்த நிறம் பிடிக்குமோ அதை நீங்கள் வானவில்லில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியது பறவைகளின் அரசன். அடுத்த வினாடி ஒவ்வொரு பறவையும் தனக்கு பிடித்தமான நிறத்தைப் பறிக்க முயன்றன. 

ஒரு கிளி முன்னால் வந்தது. எனக்கு பச்சை வர்ணமே பிடிக்கும் என்று சொல்லி, அது பச்சை நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை பச்சைக்கிளி என்று அழைத்தனர். ஒரு குருவி ஓடி வந்தது. அது மஞ்சள் நிறத்தை அணிந்து கொண்டது. அதை எல்லோரும் மஞ்சள் குருவி என்று அழைத்தனர். எல்லோரையும் தள்ளி விட்டப்படி ஒரு குருவி முன்னால் வந்து சிவப்பு நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை எல்லோரும் செங்குருவி என்று கூப்பிட்டனர். இப்படி எல்லா பறவைகளும் தாங்கள் விரும்பிய நிறத்தைப் பெற்றுக்கொண்டன. ஆனால், ஒரே ஒரு சின்னஞ்சிறிய குருவி மட்டும் தனக்கு நிறம் கிட்டாமல் நின்று கொண்டிருந்தது. 

அரசப்பறவை அந்தக் குருவியைப் பார்த்தது. நீ ஏன் மற்றவர்களைப் போல் வர்ணம் கேட்கவில்லை? என்று கேட்டது. வரிசையில் எனது முறை வரும் என்று நான் காத்திருந்தேன் என்று சொன்னது அந்த சின்னஞ்சிறு பறவை. எல்லா நிறங்களும் முடிந்து விட்டதே! என்ன செய்வது? என்றது. அரசப்பறவை. அதைக் கேட்டதும், அந்த சின்னஞ்சிறு பறவை அழுதுகொண்டே, நான் எப்போதும் இந்த சாம்பல் நிறத்தில் தான் இருக்க வேண்டுமா? என்றது. அரசப்பறவை சொன்னது, நீ மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்கிறாய்! இப்படிப்பட்ட நீ சாம்பல் வர்ணத்தில் இருத்தல் கூடாது, என்று சொல்லி எல்லாப் பறவைகளையும் திருப்பி அழைத்தது. ஒவ்வொரு பறவையிடம் இருந்தும், அது கொஞ்சம் வர்ணத்தை எடுத்து, அந்த சிறிய பறவைக்கு கொடுத்தது. அதனால் அந்த  பறவை, இப்போது மிகவும் அழகாய் காணப்பட்டது. அதைப் பார்த்து மகிழ்ந்த பறவையின் அரசன், அதற்கு பஞ்சவர்ண கிளி என பெயர் வைத்தான். 

நீதி :
பொறுமையாக இருந்தால் நமக்கு கிடைப்பது கிடைக்கும்.

இன்றைய செய்திகள்

18.09.21

◆சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது 72 சதவீதத்தில் இருந்து 86 சதவீதமாக உயர்ந்துள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

◆100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி நீலகிரி சாதனை: அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றியதால் சாத்தியமானதாக மாவட்ட ஆட்சியர் பெருமிதம்.

◆கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 2-வது நாளாக 17 ஆயிரம் கன அடி நீர் வருகை.

◆மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று உளவியல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

◆2 நாளில் ரூ.1100 கோடியைத் தாண்டியது ஓலா மின்சார ஸ்கூட்டர் விற்பனை.

◆மகளிர் நலத்துறை அமைச்சகத்தில்கூட பெண் ஊழியர்கள் பணியாற்ற தடை: தலிபான்கள் அறிவிப்பு.

◆தேசிய மாணவர் படையை(என்சிசி) மறுசீரமைக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் உருவாக்கிய உயர் மட்டக் குழுவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஆனந்த் மகிந்திரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

◆ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி முதல் வெற்றி பெற்றது.

Today's Headlines

📃 In Chennai,  wearing helmets in two-wheelers has increased from 72 percent to 86 percent, said Commissioner of Police Shankar Jive.

  📃 Nilgiris recorded  100 percent first dose vaccination: The District Collector is proudly announced that it is possible because of the cooperation of government officials.

📃  17 thousand cubic feet of water coming to Tamil Nadu from Karnataka dams on the 2nd day.

 📃A study by ICMR found that corona infections have a psychological impact on health workers, including doctors and nurses.

 📃 Ola electric scooter sales cross Rs 1100 crore in 2 days

 📃 Ban on female staff even in the Ministry of Women's Welfare announced by Taliban.

📃  Former India captain Mahendra Singh Dhoni and Anand Mahindra have been included in a high-level committee set up by the Union Defense Ministry to restructure the National Student Corps (NCC).

📃 Indian team won the first in Asian Volleyball Championship.Prepared by
Covai women ICT_போதிமரம்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive