Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.09.21

  திருக்குறள் :

அதிகாரம்:ஒப்புரவு அறிதல்

திருக்குறள்: 214

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

விளக்கம்:

ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

பழமொழி :

Anger is  sworn enemy.

தீராக் கோபம் போராய் முடியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பசித்தோர் முகம் பார்த்து பகிர்ந்து உண்ண வேண்டும். 

2. பெரியாரின் மனம் பார்த்து மனம் கோணாமல் நடக்க வேண்டும்.

பொன்மொழி :

கடும் உழைப்பிற்குப் பின் நல்ல பலன் கிடைக்கும் என்ற எண்ணமே வெற்றின் ரகசியம் --- -- பி.வி.சிந்து

பொது அறிவு :

1. இந்தியாவில் செம்பு அதிகமாக கிடைக்கும் மாநிலம் எது? 

ராஜஸ்தான்.

2.இந்தியாவில் கரும்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் மாநிலம் எது? 

உத்தரப் பிரதேசம்.

English words & meanings :

Kind - a type: things which have something common

Kind: gentle and considerate of others

ஆரோக்ய வாழ்வு :

பொடுகு நீங்க சில டிப்ஸ்


1)எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறில் பஞ்சை நனைத்து தலையில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் பொடுகை நீக்க உதவும்

2)தேங்காய் எண்ணெய்: எலுமிச்சை சாறுடன் சுட வைத்த தேங்காய் எண்ணெயை கலந்து தலையில் தடவலாம்.

3)வேப்ப எண்ணெய்: தேங்காய் எண்ணெயுடன் வேப்ப எண்ணெய் கலந்து தடவலாம். வேப்ப எண்ணெயில் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி உள்ளதால் பொடுகை நீக்க உதவும்.

4)நெல்லிக்காய்: நெல்லிக்காய் சாறை தலையில் தடவலாம், அல்லது நெல்லிக்காய் பொடியை ஷாம்பூக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

5)கற்றாழை: கற்றாழை கூழை தலையில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு கழுவி விடவும்.

கணினி யுகம் :

Ctrl + L - Line to the left. 

Ctrl + Q - Align selected paragraph to the left.

செப்டம்பர் 20 :

அன்னி வூட் பெசண்ட்  அவர்களின் நினைவுநாள்





அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besantஅக்டோபர் 11847 – செப்டம்பர் 201933) என்பவர் பெண் விடுதலைக்காகப் போராடியவர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார்.
"லிங்க்" என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி, இந்தியாவிலும் அயர்லாந்திலும் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதினார். பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

பர்கதுல்லா அவர்களின் நினைவுநாள்

பர்கதுல்லா என்றழைக்கப்படும் அப்துல் ஹபீஸ் முகமது பர்கதுல்லா (Abdul Hafiz Mohamed Barakatullah, 7 ஜூலை, 1854 – 20 செப்டம்பர், 1927) இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட இஸ்லாமியர். எழுத்தாளர்; அனல் பறக்கும் தனது பேச்சாலும், அக்கால இந்திய முன்னணி இதழ்களில் தனது புரட்சிகரமான எழுத்துகள் மூலமும் இந்திய விடுதலைப் புரட்சியைத் தூண்டியவர். தனது கட்டுரைகள் மூலம் இந்திய விடுதலைக்கு ஊக்கமூட்டியவர். இந்தியாவிற்கு வெளியே அமைந்த கதர் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர்.

நீதிக்கதை

புள்ளிமான்கள்


ஒரு காட்டில் இரண்டு புள்ளி மான்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தேதான் செல்லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் விளையாட முடியவில்லை. மழை நின்ற பிறகு வெளியே சென்று இன்னும் மழை வருமா என்று இரண்டு மான்களும் மேலே பார்த்தன. அப்போது மேகத்திற்குள்ளிருந்து வெளியே வந்தது சூரியன். மான்கள் இரண்டும் சூரியனிடம், இன்னும் மழை வருமா? என்று கேட்டன. அதற்கு சூரியன், நான் வந்து விட்டேனே, இனி எப்படி மழை வரும்? என்று சொல்லி மான்களைப் பார்த்து சிரித்தது. 

எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்றது ஒரு மான். நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்! அது தான் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது! தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் யார்? நாங்கள் தான் அழகான இரண்டு புள்ளிமான்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றன புள்ளிமான்கள். 

சரி, உங்களில் யார் திறமையானவர்கள்? என்று கேட்டது சூரியன். நாங்கள் இருவருமே திறமையானவர்கள் தான்! என்றது புள்ளிமான்கள். சூரியன் சற்று யோசித்துவிட்டு சரி, அப்படியென்றால் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். உங்களில் அந்த மரத்தை யார் முதலில் தொடுகிறார்களோ அவர்கள் தான் திறமையானவர்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்றது. 

சூரியன் பரிசு தருவதாகச் சொன்னதும் இரண்டு மான்களும் ஓடத்தொடங்கின. ஆனால் மரத்தைத் தொடாமல் நின்று கொண்டிருந்தன. சூரியன் ஏன் மரத்தைத் தொடாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டது. ஒரு புள்ளி மான் சொன்னது, நான் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்றது. இன்னொரு புள்ளிமானும், நானும் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்று சொன்னது. 

இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்த சூரியன் சொன்னது, அழகான இரண்டு புள்ளி மான்களே! உங்கள் ஒற்றுமையைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் ஒரு வானவில்லை பரிசாகத் தருகிறேன். நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் வானவில்லே வருக என்று சொன்னால் போதும். வானத்தில் அழகான வானவில் தோன்றும். நீங்கள் அதைப்பார்த்து ரசிக்கலாம் என்று சொல்லிவிட்டு சூரியன் விடை பெற்றது. மான்கள் இரண்டும் மகிழ்ந்தன. அவற்றிற்கு விருப்பமான நேரத்தில் வானவில்லை வரச்செய்து பார்த்துப் பார்த்து ரசிக்கும். 

நீதி :
நண்பர்களே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.

இன்றைய செய்திகள்

20.09.21

◆எண்ணூர் அனல் மின் நிலையத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை 6 மாதங்களுக்கு நிறுத்திவைத்து தேசியபசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுஉள்ளது.

◆தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் சுமார் 5 அடி உயரம் கொண்ட பழங்காலக் குதிர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


◆தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

◆புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 27-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாய சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

◆காலநிலை மாற்றத்துக்கு எதிரான சண்டையில் மீத்தேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனம் கொள்ள வேண்டும் என்று உலக நாடுகளின் தலைவர்களிடம் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

◆கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாதம் பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் டி 20 கிரிக்கெட்தொடர் துபாயில் நேற்று தொடங்கியது.

◆தேசிய ஓபன் தடகள போட்டியின் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்துக்கு இரட்டை தங்கம் கிடைத்தது.

Today's Headlines

📃 The National Green Tribunal issued an order to suspend the environmental permit issued by the Central Ministry of Environment to the Ennore Thermal Power Station for 6 months.

 📃 An ancient container used to store grains 5 feet high has been found during an excavation at Korkai near Eral in Thoothukudi district.


 📃 The Chennai Meteorological Department has forecast heavy rains in 4 districts of Tamil Nadu.

 📃 The Federation of Farmers' Associations has called for a nationwide blockade on the 27th against the new agricultural laws.

 📃 Joe Biden has urged world leaders to focus on controlling methane emissions in the fight against climate change.

  📃 The IPL T20 cricket series, which was halted halfway through last month due to the Corona threat, started yesterday in Dubai.

  📃Tamil Nadu won double gold in the 400m hurdles at the National Open.


Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive