PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.09.21

    

திருக்குறள் :

அதிகாரம்:வலி அறிதல்

குறள்:471

வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்.

விளக்கம்:

செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்யவேண்டும்.

பழமொழி :

A dwarf threatens Hercules.

மலையைத் துளைக்கச் சிற்றுளி போதும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பசித்தோர் முகம் பார்த்து பகிர்ந்து உண்ண வேண்டும். 

2. பெரியாரின் மனம் பார்த்து மனம் கோணாமல் நடக்க வேண்டும்.

பொன்மொழி :

இன்றைய காலகட்டத்தில் அமைதி என்பது பகை இல்லாமல் நிம்மதியாக வாழ்வது ஆகும்.--- பரமஹம்சர்

பொது அறிவு :

1.அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசியை வழங்கிய முதல் இந்திய நகரம் எது?

 புவனேஷ்வர்.

2.இந்தியாவின் மிகப்பெரிய சூரியசக்திப் பூங்கா எங்கு அமைக்கப்பட உள்ளது? 

குஜராத்

English words & meanings :

Season - a period of the year. பருவ காலம்

Season - to add spice or herbs to add flavor to the food. உணவில் நறுமணம் சேர்க்க நறுமணப் பொருட்கள் பயன் படுத்துவது.

ஆரோக்ய வாழ்வு :

வறட்டு இருமல் நீங்க சில டிப்ஸ்

1)பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் அரைத் தேக்கரண்டி தேனை கலந்து பருகினால் வறட்டு இருமலை தடுக்கலாம்.

2)ஒரு டீஸ்பூன் சோம்பு, அரை பட்டை மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூளை நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து ஆரியவுடன் பருகவும். வறட்டு இருமலுக்கு இதமாக இருக்கும்.

3)தேனில் உள்ள இருமலைக் குணப்படுத்தும் பண்புகள், வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அத்தகைய தேனை 5 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து 2 நிமிடம் சூடேற்றி இறக்கி குளிர வைத்து சாப்பிட, வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

4)கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். இதில் உள்ள வலி நிவாரண பண்புகள், தொண்டைச் சுவற்றில் இருக்கும் பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்யும். அதிலும் கற்றாழை ஜெல் ஜூஸில் தேன் கலந்து ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், வறட்டு இருமல் நீங்குவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

5)யூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த சுடுநீரை நிரப்பி, அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், வறட்டு இருமலைத் தடுக்கலாம்.

கணினி யுகம் :

DELETE - Deletes the selected item(s).

 SHIFT+DELETE - Delete the selected items permanently

செப்டம்பர் 21 :

உலக அமைதி நாள்

உலக அமைதி நாள் (International Day of Peaceஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சம இரவு நாள்
சம இரவு நாள்(Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினைக் கடப்பது நிகழும். சம இரவு நாள் இவற்றில் எந்தவொரு நாளையும் குறிக்கும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். இலத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. ஈக்வீ(equi) எனபது சமம் என்றும் நாக்சு(nox) என்பது இரவு என்றும் பொருள்படும்.

நீதிக்கதை

பூனையும் எலியும்

ஒரு ஊரில் சக்தி என்றொருவன் இருந்தான். அவன் வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால் எலியைப் பிடிக்க பூனை ஒன்றை வளர்க்க ஆரம்பித்தான். பூனை வந்ததும் எலிகளால் முன்புபோல தானியங்களை திருட முடியவில்லை. பூனையை விரட்ட வேண்டும் அல்லது நண்பனாக்கி கொள்ள வேண்டும் என்று ஒரு எலி தன் கூட்டத்தினரிடம் கூறியது. அதற்கு ஒரு கிழட்டு எலி பூனை நம் ஜென்ம விரோதி. அதை நண்பனாக்கா வேண்டாம். அதை விரட்டுவதும் நம்மால் முடியாது. அதனால், நாம் வேறு இடத்திற்கு செல்லலாம் என்றது. 

கிழட்டு எலி சொல்வதைக் கேட்டு, மற்ற எலிகள் வீட்டை காலி செய்தது. ஆனால் பூனையை நண்பணாக்கி கொள்ளவேண்டும் என்று சொன்ன எலி மட்டும் போகவில்லை. எப்படியாவது பூனையை நண்பனாக்கிக் கொண்டு கூட்டுக் கொள்ளையடிக்கலாம் என்று அவ்வீட்டிலேயே தங்கிவிட்டது. ஒருநாள் அந்த எலியை பூனை பிடித்துவிட்டது. பூனையிடம் மாட்டிய எலி, பூனையாரே என்னை விட்டுவிடு. நான் உன் நண்பனாக விரும்புகிறேன். என்னை விட்டு விட்டால் உனக்கு தினமும் விதவிதமான தின்பண்டங்களைத் தருகிறேன். மேலும் உனக்கு பாலும் காய்ந்த ரொட்டியும் தானே கிடைக்கிறது என்று ஆசை வார்த்தைகள் கூறியது. பூனையோ, ஏ எலியே எனக்கு பாலும், காய்ந்த ரொட்டியும் போதுமானது. நீ நாளை தரும் தின்பண்டத்திற்கு ஆசைப்பட்டு இன்று கிடைக்கும் உனது கறியை இழக்க நான் முட்டாளில்லை என்று சொல்லி எலியைக் கொன்று ருசித்து சாப்பிட்டது. 

நீதி :
எதிரிகளிடம் நியாயம் எதிர்பார்ப்பது தவறு.

இன்றைய செய்திகள்

21.09.21

★7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் பொறியியல் கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர்  அறிவித்துள்ளார். 11000 மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.

★தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 56 சதவீதத்தைக் கடந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

★கோவாக்சின் தடுப்பூசிக்கு சர்வதேச அங்கீகாரம் அளிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு வரும் அக்டோபர் 6-ம் தேதி முடிவு எடுக்க உள்ளது.

★ஸ்பெயினின் கானரி தீவுகளில் எரிமலை வெடித்துச் சிதறி வருவதால் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

★தலிபான்கள் கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் படிப்பதற்கான பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது அவர்களின் கல்வி உரிமையைப் பறிப்பதாகும் என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ, யுனிசெஃப் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

★தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கடைசி நாளில் தமிழகத்திற்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

★2021்ம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசனுடன் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக கேப்டன் விராட் கோலி அறிவித்துள்ளார்.

Today's Headlines

★ The Chief Minister has announced that the government will accept the engineering tuition and accommodation fees of students who studied in government schools from classes 6 to 12 under the 7.5% reservation. 11,000 students will be benefited 

 ★ The number of people who have been vaccinated against corona in Tamil Nadu has crossed 56 percent, said the Minister of Health.

 ★ The World Health Organization is going to decide on October 6 for the international recognition of the Covaccine Vaccine.

 ★ Thousands of people are being evacuated from the surrounding areas as volcanoes erupt in the Canary Islands of Spain.

 ★ UNESCO and UNICEF have condemned the closure of schools for girls in Taliban-occupied Afghanistan as a violation of their right to education.

 ★ Tamil Nadu won 2 more gold medals on the last day of the National Open Athletics Championship.

 ★ Captain Virat Kohli has announced that he will step down as captain of the RCB team with the 2021 IPL T20 season.

Prepared by
Covai women ICT_போதிமரம்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group