Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.09.21

  திருக்குறள் :

அதிகாரம்:வலி அறிதல்

குறள்: 472

ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்.

விளக்கம்:

தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவோர்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை.

பழமொழி :

Better to bend than to break.


உடைந்து போவதை விட, வளைந்து கொடுப்பது மேல்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பசித்தோர் முகம் பார்த்து பகிர்ந்து உண்ண வேண்டும். 

2. பெரியாரின் மனம் பார்த்து மனம் கோணாமல் நடக்க வேண்டும்.

பொன்மொழி :

தொழிலாளர்கள் கடமையைச் செய்வதைத் தடுத்தால் உணவு ,உடை கிடைப்பது தடைப்படும்.---- விவேகானந்தர்.

பொது அறிவு :

1."காட்டு மரங்களின் சக்கரவர்த்தி " என அழைக்கப்படும் மரம் எது? 

தேக்கு மரம்.

2.கிரிக்கெட் மட்டை தயாரிக்க பயன்படுத்தப்படும் மரம் எது? 

வில்லோ மரம்.


English words & meanings :

Light - energy which helps people to see things, 

Light - not heavy; easy to lift

ஆரோக்ய வாழ்வு :

நெய்யின் நன்மைகள் சில

1)நெய்யில் வைட்டமின் K, A, மற்றும் E உள்ளது. இது கண்கள் மற்றும் சருமத்தை பாதுகாப்பதுடன் இரத்ததையும் சுத்தப்படுத்தும்.


2)நெய் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. வலுவைத் தருவதுடன் உடலில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்கின்றது.

3)நெய்யில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள நச்சுப் பொருட்களைவெளியேற்றச் செய்யும்.

4)நெய் உடல் எடையைக் குறைக்க மிகவும் எளிதான மருந்து. ஒரு தேக்கரண்டி நெய் சாப்பிட்டால் உடலில் மலச்சிக்கலைத் தடுத்து எடையைக் குறைக்கும்.

கணினி யுகம் :

F1 - Displays help information.

 F2 - Rename a selected item.

செப்டம்பர் 22 :

மைக்கேல் பரடே அவர்களின் பிறந்தநாள்




மைக்கேல் பரடே (Michael Faraday, செப்டெம்பர் 221791 – ஆகஸ்டு 251867)), பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல்மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இக்காலச் சோதனைச்சாலைகளில் சூடாக்குவதற்கான ஒரு கருவியாக உலகளாவிய முறையில் பயன்படுகின்ற பன்சன் சுடரடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே.

நீதிக்கதை

வல்லவர் யார்?

ஒரு நாள் எறும்பு தரையில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது. நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது. எறும்பு பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே என்று சொன்னது. அப்படியென்ன முக்கியமான கடமை? என்று பூரான் கேட்டது. 

மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை என்றது எறும்பு. உன்னிடம் பேசிக்கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது என்று கூறி எறும்பு சென்றுவிட்டது. பூரானுக்கு எறும்பின் மேல் வருத்தம். அதனால் எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக்கொண்டது. 

அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப்போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக்கொள்கிறேன் என்றது. அதற்கு எறும்பு மிக அமைதியுடன் பூரானே, உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது. அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய். ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சையெல்லாம் வேண்டாம் என்று திரும்பவும் கூறியது. பூரானோ அப்படி என்ன சாகசத்தை நீ செய்வாய் என்று கேட்டது. 

எறும்பு பூரானை ஒரு தண்ணீர் தொட்டியின் மேல் அமர்ந்து வேடிக்கை பார்க்கச் சொல்லிவிட்டு, கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் ஏறி தண்ணிரில் விழுந்து அந்த துரும்பைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் மிதந்தது. பூரானைப் பார்த்து உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா? என்று கேட்டது. பூரான் அப்போதுதான் தனது தவறினை உணர்ந்தது. பின்பு, பூரான் எறும்பிடம் மன்னிப்புக் கேட்டு சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது. 

நீதி :
எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டு.

இன்றைய செய்திகள்

22.09.21

◆ஊரகப் பகுதிகளில் நிலமற்ற, வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு நிலம் வழங்கி ஊரக வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க சிறப்புப் பணிப்பிரிவு (Task Force) அமைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

◆சிவகங்கை மாவட்டம், இளையான் குடி அருகே முனைவென்றியில் 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி கள், கீறல் குறியீடுகள் கண்டெடுக்கப்பு.

◆தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்ந்தால், கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையில் புள்ளிவிவரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

◆மத்திய அரசின் திட்டங்களை எளிதாக பெறும் வகையில் விவசாயிகளுக்கு 12 இலக்க எண் கள் கொண்ட புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

◆கனடா நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பில் ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனால், லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ 3-வது முறையாக பிரதமராகயிருக்கிறார். 

◆இந்தியாவின் 70வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை  தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ராஜா ரித்விக் பெற்றுள்ளார்.

◆உள்ளூரில் விளையாடும் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

Today's Headlines

📃The Government of Tamil Nadu has announced that a Special Task Force has been set up to provide land to the landless and homeless people in rural areas under the Rural Housing Scheme.

 📃 3,200-year-old lid-covered old people's coffin (thazhi)  scratch marks and symbols were discovered at Munaiveneri near Ilayan Gudi, Sivagangai District.

 📃 If the NEET examination continues to exist in Tamil Nadu, the rural poor students will not be able to join the medical course, said Judge AK Rajan in a panel report with figures.

 📃 Farmers will be issued a new 12 digit ID card for easy access to Central Government schemes.

 📃The ruling Liberal Party has won the parliamentary election in Canada.  Thus, the leader of the Liberal Party Justin Trudeau has become the Prime Minister for the 3rd time.

 📃 Raja Ritwik from Telangana has won the 70th Grand Chess Master title of India.

 📃 The schedule of the Indian cricket team for the local tournament has been announced.

Prepared by
Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive