பேரவையில் பாமக தலைவர்ஜி.கே.மணி பேசும்போது,"தமிழகத்தில் 2006-ம் ஆண்டுக்கு முன் அரசுக் கல்லூரி இல்லை. நான்சட்டப்பேரவையில் கேட்டுக்கொண்டதன் பேரில், முதலில் மேட்டூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அன்று முதல் ஆசிரியரல்லாத பணியாளர்கள், 15 ஆண்டுகளாக மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். தற்போது பணி நியமனம் செய்யப்பட்டவர்கள், வயது மூப்பு அடைந்துள்ளனர். எனவே, அவர்களை பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும்" என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் க.பொன்முடி பேசும்போது, "கடந்த 2006-ல் கருணாநிதி ஆட்சியில் உறுப்புக் கல்லூரியாக தொடங்கப்பட்ட அக்கல்லூரி 2018-ல் அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டது. அப்போது பல்கலைக்கழக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தற்போதுசம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத் துக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்காலிக பணியாளர்கள் அங்கேயே பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்தஆட்சியில் குழு அமைத்து நியமிக் கப்பட்ட ஆசிரியர், ஆசிரியரல்லா பணியிடங்களில் தவறுகள் நடந்துள்ளதால், தற்போது வெளிப்படைத்தன்மையுடன் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், ஆசிரியரல்லாதவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமும் நியமிக்கப்படுவார்கள்.
மேட்டூர் அரசுக் கல்லூரி மட்டுமின்றி, மற்ற கல்லூரிகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் கடந்த காலத்தில் அதிகம் உள்ளதால், அரசின் நிதி நிலைக்கு ஏற்ப, வெளிப்படையாக பணி வழங்கப்படும்.
தற்போதுள்ளவர்களுக்கு இதுவரை பணியாற்றியதற்கான தகுதிகளும், மதிப்பெண்களும் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...