பள்ளிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறையத்தொடங்கியதையடுத்து கடந்த 1-ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்புக்கான பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சில பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். பொது இடங்களில் விநாயகர் சதூர்த்தி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும், வரும் 12-ம் தேதி மட்டும் பத்து லட்சம் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...