கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களில் பட்டியலினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராகசெயல்படக் கூடாது. வளாகங்களில் எக்காரணம் கொண்டும் சாதிரீதியாக பாகுபாடு காட்டாமல் இருப்பதை கல்வி நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
இதுதவிர சாதி பாகுபாட்டால் பாதிக்கப்படும் மாணவர்கள் புகார் தெரிவிக்க, கல்லூரிகளின் இணையதளத்தில் வசதி ஏற்படுத்தவேண்டும். அவ்வாறு பெறப்படும் புகார்களை விசாரிக்க தனி குழுவைஅமைத்து, அவற்றின் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விவரத்தை யுஜிசிக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும்.
அதேபோல், சாதிரீதியான பாகுபாடு விவகாரங்களை கவனமுடன் கையாள்வதற்கு பேராசிரியர்கள், அலுவலர்களிடம் அறிவுறுத்த வேண்டும். இதுதொடர்பாக கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட பணி விவரங்களை யுஜிசி இணையதளத்தில் உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...