முதல்வரின் அறிவிப்புகள்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பட்ஜெட் தாக்கல் செய்த போது அந்த நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள் ஏதும் இடம் பெறவில்லை என்று அரசு ஊழியர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டினர். மேலும் அரசு ஊழியர்கள் அதிகம் எதிர்பார்த்த அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் இடம் பெறவில்லை. இது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து அரசு ஊழியர்கள் மாவட்ட தலைநகரங்களில் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுகவினர் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது வரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் 110 வது விதியின் கீழ் முதல்வர் 2022ம் ஆண்டு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 13 முக்கிய சிறப்பு அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...