NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Flash News : ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்: முதல்வர் ஸ்டாலின்


2022 ஏப்ரல் 1க்கு பதில் 2022 ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வு அமல் படுத்தப்படும் என சட்ட சபையில் 110 விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

போராட்ட காலத்தில் பணி மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அதே இடத்தில் பணி வழங்கப்படும் எனவும் அறிவிப்பு



அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: 

சென்னை: 
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அக உள்ளவிலைப்படி வரும் 2022 ஜன., முதல் உயர்த்தப்படும் என 110வது விதியின் கீழ் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 2022 ஜன., முதல் உயர்த்தப்படும். இதனால்,16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.

அரசுக்கு 6480 கோடி ரூபாய் கூடுதல் செலவு

அரசு பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தில் மகன், மகள் ஆகியோர் சேர்க்கப்படுவார்கள்

*ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணியில் அமர்த்தப்படும் முறை ஒழிக்கப்படும்.*

அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை விரைவில் அறிவிக்கப்படும்

சத்துணவு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக அதிகரிக்கப்படும்.

*மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை.

அரசு பள்ளியில் இளநிலை உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கைஎடுக்கப்படும்.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் விகிதாச்சார எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலம் பணி நாட்களாக கருதப்படும்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதே இடத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive