Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.03.22

   திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: தீ நட்பு

குறள் எண்: 819

குறள்:
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு

பொருள்:
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.

பழமொழி :

A  wise enemy is better than a foolish friend


முட்டாள் நன்பனைவிட கற்றறிந்த பகைவனே மேல்

இரண்டொழுக்க பண்புகள் :

1வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

துன்பம் நம்மை அடுக்கடுக்காக வந்து தாக்கினாலும், மனந்தளராமல் ஊக்கத்தோடு செயல்படுபவனிடம் செல்வம் சேர்ந்து விடும்.

            - ஔவையார்

பொது அறிவு :

1.இந்தியாவில் தேசிய புரத தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 

பிப்ரவரி 27. 

2. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் திட்டத்திற்கு பெயர் என்ன? 

ஆப்ரேஷன் கங்கா.

English words & meanings :

Ecstatic - very happy, அதிக சந்தோசம். 

Leaden - heavier, அதிக பாரமான

ஆரோக்ய வாழ்வு :

உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும் , கண் பார்வையை அதிகரிக்கவும் , தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது . வைட்டமின் ஏ , டி , இ , கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும் .

கணினி யுகம் :

Alt + Tab - Switch between open application. 

Alt + Shift + Tab - Switch backward between open applications.

மார்ச் 02


சரோஜினி நாயுடு
சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ன் ஆளுநராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுநரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.

நீதிக்கதை

மந்திர புல்லாங்குழல்

பரமக்குடி என்ற ஊரில் கதிரேசன் என்ற ஏழை இளைஞன் இருந்தார். அவர் பக்கத்து ஊரில் ஜம்பு என்ற ஜமிந்தாரிடம் வேலை பார்த்து வந்தார். கடுமையாக உழைத்தாலும் ஜமிந்தார் ஒன்றுமே கொடுக்க மாட்டார் சாப்பாடு மட்டுமே போடுவார். இருந்தாலும் தனக்கு வேலை கொடுத்த ஜமிந்தாருக்கு மிகவும் உண்மையாக உழைத்தார். ஜமிந்தார் கொடுப்பதில் தன் தாயாருக்கு பொருட்கள் வாங்கி கொடுத்து அனுப்புவார். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்து, பின்னர் தன் தாயை பார்க்க போவதாக ஜமிந்தாரிடம் சொன்னார் கதிரேசன். ஜமிந்தாருக்கு அவரை விட மனசு இல்லை. இருந்தாலும் போய் வா. இதோ இரண்டு ஆண்டுக்கான உன் கூலி என்று கூறி 5 செப்பு காசுகள் கொடுத்தார். 

முதலாளிக்கு நன்றி சொல்லிட்டு ஊருக்கு கிளம்பினார். அதே நேரம் அந்த ஊரில் ஒரு பெரிய திருடன் ஒருவன், ஜம்பு ஜமிந்தாரின் வீட்டை ரொம்ப நாட்களாக நோட்டம் போட்டுட்டு வந்தான். அப்போது முன்னர் ஜமிந்தார் வெளியே சென்ற நேரம் பார்த்து அவரது வீட்டில் யாருக்கும் தெரியாமல் நுழைந்து, அங்கே பாதுகாப்பாக வைத்திருந்த தங்க காசுகள், நகைகள் மற்றும் அனைத்து ஆபரணங்களையும் கொள்ளை அடித்து, பெரிய மூட்டை கட்டினான். இது போதாது என்று நினைத்து, கதிரேசன் கையில் இருக்கும் பொருட்களையும் பிடுங்க திட்டமிட்டான். எப்படி கதிரேசன் காட்டு வழியாகத் தான் நடந்து ஊருக்கு செல்வார். எனவே அங்கே அவரை அங்கேயே மடக்கி இருப்பதை திருடலாம் என்று நினைத்தான். குறுக்கு பாதையில் ஓடி காட்டில் ஒளிந்துக் கொண்டான்.

கதிரேசன் காட்டு வழியாக செல்லும் போது ஒரு இடத்தில் ஒரு குள்ளமான ஒருவர் கீழே விழுந்து கிடந்தார், அவரை ஓடி போய் தூக்கி, குடிக்க தண்ணீர் கொடுத்தார். சிறிது நேரத்தில் அந்த குள்ள மனிதர் கண் விழித்து பார்த்தார், அவரது தோற்றம் வேடிக்கையாக இருந்தது. நீண்ட வெண்ணிறத்தாடி, தலையில் கூம்பு வடிவில் தொப்பி. அய்யா, பெரியவரே! என்ன ஆச்சு, ஏன் மயங்கி கிடக்கிறீங்க. தம்பி, என்னை காப்பாற்றியதற்கு நன்றி, நான் பசியாலும், பட்டினியாலும் வாடுகிறேன், எனக்கு உன்னால் முடிந்த உதவியை செய்வாயாக. அய்யா, நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த வருமானம் இதோ இருக்குது, இதில் 2 செப்பு காசுகள் நீங்க வைத்துக் கொள்ளுங்க. 

தம்பி! உன் இரக்க குணம் என்னை மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. அதற்கு கை மாறாக நான் உனக்கு உதவ இருக்கிறேன். என்னிடம் சில மந்திர சக்திகள் இருக்கின்றன. அதனை பயன்படுத்த மற்றவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறேன். கதிரேசனுக்கு ஆச்சரியம், நம்பமுடியவில்லை. என்னடா இது, நாம இவருக்கு உதவினால் அவர் நமக்கு உதவுகிறாராம். அதுவும் மந்திர சக்தியால் புரியவில்லையே என்று திகைத்தார். 

தம்பி, சந்தேகம் வேண்டாம், உனக்கு உதவி செய்ய இருக்கிறேன், என்ன வேண்டும் கேள். அய்யா, எனக்கு இசையில் மிக்க ஆர்வம் உண்டு, நான் ஊதினால் இனிமையான இசை வரக்கூடிய ஒரு புல்லாங்குழல் கொடுங்க, அதை கேட்டவர்களும் மெய் மறந்து போகும் அளவுக்கு இருக்க வேண்டும். உடனே குள்ள மனிதர் கண்ணை மூடி ஏதோ மந்திரம் சொல்ல, கையில் அழகான புல்லாங்குழல் வந்தது, அதை அழகேசனுக்கு கொடுத்து, ஆசிர்வாதம் செய்து, வேறு வழியில் சென்று விட்டார். 

கதிரேசனும் மகிழ்ச்சியாக நடக்கத் தொடங்கினார். திடிரென்று அவர் முன்னால் பெரிய கத்தியோடு அந்த திருடன் வந்து நின்றான். மரியாதையாக உங்க முதலாளி கொடுத்த காசுகளை எனக்கு கொடு என்றான். கதிரேசனுக்கு பயம். ஏன் வீணாக திருடனிடம் சண்டை போட்டு உயிரை இழக்க வேண்டும் என்று நினைத்து பையில் இருந்த 2 செப்பு காசுகளை கொடுத்தான். என்ன 3 செப்பு காசா, அவர் 5 அல்லவா கொடுத்தார். தங்கம் கிடையாதா? அவன் வீட்டில் இத்தனை தங்கம் இருந்ததா? ஆமாம் மீதி 2 காசு எங்கே, அதையும் கொடு, இல்லை என்றால் கொன்று விடுவேன் என்றான். 

என்னிடம் 3 தான் இருக்குது, 2 ஒரு குள்ள மனிதருக்கு கொடுத்து விட்டேன். நான் நம்ப மாட்டேன். எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்? கதிரேசன் என்ன செய்வது என்று யோசித்தார், திருடனிடமிருந்து தப்பிக்க ஒரே ஒரு ஆயுதம், அந்த புல்லாங்குழல் தான். அதை உபயோகிக்கலாம் என்று முடிவு செய்து மீதி 2 காசு, இதுக்குள்ளே இருக்குது. இருங்கள் ஊதி எடுக்கிறேன் என்று கூறி புல்லாங்குழலை இசைக்கத் தொடங்கினார். அய்யா, அய்யா, தயவு செய்து புல்லாங்குழல் இசைப்பதை நிறுத்துங்க, இல்லை என்றால் நான் இறந்து போயிடுவேன். என்னால் வலி தாங்க முடியவில்லை. ஆடாமலும் இருக்க முடியவில்லை. நான் திருடியதை எல்லாம் உங்களுக்கே கொடுத்து விடுகிறேன் என்றான்.

அங்கே ஜமிந்தார் அய்யோ! எல்லாமே போய்விட்டதே, நான் சம்பாதித்தது எல்லாமே களவு போய்விட்டதே, நான் தவறாக சம்பாதித்தது முதல் எல்லாமே போய்விட்டதே, இனிமேல் நான் என்ன செய்வேன் என்று புலம்பிக் கொண்டிருந்தார். கதிரேசன் அவரை பார்த்து, அய்யா அழ வேண்டாம். திருடன் திருடியதை எல்லாம் நான் வாங்கி வந்து விட்டேன், அவனை காட்டில் கட்டி வைத்திருக்கிறேன். உடனே ஊர்க்காவலர்களை அழைத்துச் சென்று பிடியுங்கள். இதோ உங்க நகைகள், பணம், சரியாக இருக்கிறதா என்று பாருங்கள் என்றார்.

ஜமிந்தாருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை இத்தனை நாள் கொடுமைப்படுத்தியும், நேர்மையாக நடந்து கொண்ட அழகேசன் மீது மரியாதை ஏற்பட்டது, தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, அழகேசனுக்கு அந்த ஊரிலேயே பங்களா ஒன்றையும், நிறைய நிலங்களையும் கொடுத்து உதவினார். அழகேசனும் தன் தாயாருடனும், அற்புத புல்லாங்குழலுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

இன்றைய செய்திகள்

02.03.22

★6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் உருவாக்க நடவடிக்கை: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்.

★பணியில் சேர 8-ம் வகுப்பு மட்டும் அடிப்படை கல்வித்தகுதி: கிராம உதவியாளர் பணிக்கு கால்கடுக்க காத்திருந்த பொறியியல் பட்டதாரிகள்.

★வாகனங்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்போர் குடும்பத்துக்கு இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்வு: வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

★சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு மறு உத்தரவு வரும் வரை தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

★ஆபரேஷன் கங்கா : 3 விமானங்களில் உக்ரைனில் சிக்கிய 43 தமிழக மாணவர்கள் உட்பட 550 இந்தியர்கள் நாடு திரும்பினர்.

★6-வது நாளாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை.

★உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும்: ரஷ்யாவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்.

★ உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி; தங்கம் வென்ற இந்தியா.

★உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட ரஷ்யா மற்றும் பெலாரஸ் அணிகளுக்கு உலக ரக்பி நிர்வாகக் குழு இடைக்கால தடை விதித்துள்ளது.

★ரஷ்ய அணி சர்வதேச கால்பந்து போட்டிகளில் பங்கேற்க இடைக்கால தடை.

Today's Headlines

 ★ Steps to create 6 new Government Medical Colleges in Tamil Nadu: Information from the Minister of Health.

 ★ Only 8th standard basic education to join the service: Engineering graduates waiting to step foot for the post of Grama Niladhari.

 ★ Compensation for the families of those killed in road accidents will be increased to Rs 2 lakh: Effective from 1st April.

 ★ The Federal Ministry of Civil Aviation has announced that the ban will be extended until further orders for international passenger flights.

 ★ Operation Ganga: 550 Indians returned home, including 43 Tamil Nadu students stranded in 3 planes in Ukraine.

 ★ Russia's attack on Ukraine on Day 6: No progress in negotiations.

 ★ Immediate ceasefire: UN calls on Russia  Instruction of the General Secretary.

 ★ World Cup sniper competition;   India won the gold.

 ★ The World Rugby Board has imposed an interim ban on Russia and Belarus playing in local and international matches.

 ★ Interim ban on Russian team participation in international football matches.
 Prepared by

Covai women ICT_போதிமரம்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive