Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

ஏன் ஆசிரியருங்க மட்டும் இப்படி அக்கறை எடுத்து அரிவாள் வெட்டு வாங்குறீங்க,?

பின்ன கொண்டையோடு வந்தா எண்ணெய் தேச்சு, தலைவாரி, பூவச்சு விடனும், நீங்கபாட்டுக்கு ஒழுக்கம், படிப்பு, கல்வினு கேட்டா அவன் என்ன பண்ணுவான் பாவம் சின்ன பசங்க,

அவன் அந்த முடியோடு வீட்டுல இருந்துதான வருகிறான், அப்ப அவன பெத்தவங்களுக்கு தன் புள்ள இப்படி இருக்கானே என்ற கவலை இல்ல,

அந்த முடியோடு அவன் இருக்கும் தெரு, ஊர் வழியாத்தான பள்ளிக்கு வருகிறான், அப்ப இந்த சமுதாயத்திற்கும் அக்கறை இல்ல,

அப்புறம் ஏன் ஆசிரியருங்க மட்டும் இப்படி அக்கறை எடுத்து அரிவாள் வெட்டு வாங்குறீங்க,

ஏன்னா தன் கண் முன்னே தன் மாணவன் கெட்டுப்போவதை எந்த ஆசிரியரும் விரும்ப மாட்டார்கள், எப்படியாது அவனை இந்த சமுதாயத்தில் வாழ தன்னால் இயன்ற வழியை காட்டத்தான் விரும்புவர்.

ஒரு வகுப்பறையில் முன்னர் எல்லாம் ஏதோ ஓரிரு மாணவர்கள் தான் இப்படி இருப்பர், அவர்கள் கூட இந்த அளவிற்கு எல்லாம் கிடையாது, ஏனென்றால் அன்றைய கல்வி முறையில் கற்றல் கற்பித்தலோடு கண்டிப்பும் இருந்தது,

ஆனால் இன்று நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் போலி நாயகர்களின் திரைப்படங்களை பார்த்தும், தவறான நபர்களின் வழிகாட்டலாலும் பல மாணவர்கள் நெறிபிறழ்ந்து நடக்கின்றனர்.

இதற்கு உளவியல் ரீதியாக ஆலோசனை கொடுத்தாலும் சில நேரங்களில் கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும், இல்லை என்றால் அவன் ஒருவனை பார்த்து அடுத்தவன் ஆரம்பிப்பான், இப்படித்தான் மாணவர்கள் தடம் மாறிச்செல்கின்றனர்.

முதல் முறை செய்யும் போது தவறி செய்கிறார்கள் எனலாம், ஒவ்வொரு முறையும் இப்படி செய்தால் தவறு என்று தெரிந்தே செய்கிறார்கள் என்றுதான் அர்த்தம். இவர்களுக்கு எத்தகைய உளவியல் ஆலோசனைகளை கொடுப்பது.

கல்வித்துறையும் அரசும் இது ஏதோ இங்கொன்று அங்கொன்றாய் நடக்கிறது என்று நினைக்கக்கூடும் ஆனால் இன்று பெருபாலான இடங்களில் இப்படி எண்ணற்ற செயல்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. சொல்லவும் முடியாமல் கடந்து போகவும் முடியாமல், கண்டிக்கவும் முடியாமல் தவிக்கும் ஆசிரியர்கள் ஏராளம்.

ஒருநாட்டின் முதல் குடிமகன் முதல் கடைகோடி மனிதன் வரை அத்தனை பேரும் யாரோ ஒரு ஆசிரியரை கடந்துதான் வந்திருப்பர், அப்படிப்பட்ட ஆசிரியர்களே இன்று பணிப்பாதுகாப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

எப்போது இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும், ஏற்கனவே ஆன்லைன் ஆஃப்லைன் பதிவேடுகளின் பணிகளால் கற்பித்தலில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் போது இதுபோன்ற நிகழ்வுகள் இன்னும் அதிக மன உளைச்சலைத்தான் தரும்.

தயவு செய்து கல்வித்துறை இதற்கு உடனடியாக தீர்வுகாணாவிடில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற வரிகள் அடுத்த தலைமுறைக்கு தெரியாமலே போய்விடும். 
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive