NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai's Centum Coaching Team (2021-2022) - A Trend Setter, Back Again!

Padasalai's Centum Coaching Team ( 2021-2022 ) - A Trend Setter, Back Again!

அன்புள்ள ஆசிரியர்களே & மாணவர்களே,



  வணக்கம். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள பல்வேறு புதுமையான சேவைகளை வழங்கி வரும் நமது பாடசாலை வலைதளம் மேலும் ஒரு புதிய முயற்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள திறமையான ஆசிரியர்களை ஒருங்கிணைத்து 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 100 சதவீதம் மதிப்பெண்கள் பெறுவது குறித்து இலவசமாக சிறப்பு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கி வருகிறோம்.



            தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பேராதரவு பெற்ற "பாடசாலையின் Centum Coaching Team" - 9-வது ஆண்டாக, வெற்றிகரமான இச்சேவையை மீண்டும் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.

இக்குழுவில் இணைய ஆசிரியர்கள் செய்ய வேண்டியது என்ன?

  1. Click Here & Enter Your Details (Teachers Only)
  2. மேலே தரப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். 
  3. பிறகு பாடசாலை வலைதளத்திற்கென பிரத்யோகமான, தாங்களே தயார் செய்த வினாத்தாளை நமது இமெயில் ஐடிக்கு (Email ID: padasalai.net@gmail.com) அனுப்பி வைக்க வேண்டும். (வினாத்தாள் Public Exam 2022 முறையில் கடினமாக (Reduced Syllabus - Based),  பாட பகுதிகளின் உள்ளிருந்து எடுக்கப்பட்ட (Creative Questions Included), May 2022 பொதுத் தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்களைக் உள்ளடக்கி, நுணுக்கமாக தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். - Word Format  ல் [With Font] வினாத்தாள் இருக்கலாம்).
  4. தமிழகம் முழுவதும் உள்ள மீத்திறன் மிகுந்த மாணவர்கள் மட்டுமே இத்தேர்வினை எழுத இருப்பதால் வினாத்தாள் மிகுந்த கடினமாக தயாரிக்கப்படவேண்டும்.
  5. நீங்கள் அனுப்பக்கூடிய வினாத்தாள் பாடசாலை வலைதளத்தில் சிறப்பு பயிற்சி பகுதியில் வெளியிடப்படும்.
 மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  1. Click Here & Enter Your Details (Students Only)
  2. இங்கு வழங்கப்படும் சிறப்பு வினாத்தாளை பிரிண்ட் எடுத்து விடுமுறை நாட்களில் உரிய நேரத்திற்குள், முழுமையான, முறையான தேர்வு எழுதிப் பார்த்து சுயமாக மதிப்பீடு செய்து பார்த்துக்கொள்ள வேண்டும்.
  3. Slow Learners மீது மட்டும் கவனம் செலுத்தாமல் மீத்திறன் மிகுந்த மாணவர்களுக்கும் உதவும் நோக்கில், மாணவர்களின் நலன் கருதி, இச்சேவையில் தங்களை இணைத்துக்கொண்டுள்ள பாடசாலை ஆசிரியர் குழுவினை, மாணவர்கள் மிகுந்த பணிவுடன் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களையும், ஆலோசனைகளையும் அலைபேசி மூலமாக பெறலாம். Covid 10 காரணமாக இவ்வாண்டு விடைத்தாள்கள் திருத்தி அனுப்பி வைக்கப்படாது, எனவே விடைத்தாள்களை ஆசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டாம். மாணவர்களே சுயமாக மதிப்பீடு செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். 
  4. முக்கியக் குறிப்பு 1 - கடந்த வருடங்களில் பெற்றோர்கள்  சிலர் ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் என்ற பெயரில் பணம் அனுப்பி உள்ளனர். தயவு செய்து அதனை தவிர்க்கவும். பாடசாலை ஆசிரியர்கள் குழு ஒரு குடும்பமாக இணைந்து சேவை உள்ளத்துடன் தொடர்ந்து 9-வது  ஆண்டாக இச்சேவையில் ஈடுபட்டு வருகிறோம். ஆண்டு இறுதி பொது தேர்வில் மதிப்பெண் பெற்றவுடன் மறக்காமல் உரிய ஆசிரியர்களுக்கு அலை பேசியில் தாங்கள் பெற்ற மதிப்பெண் விவரத்தை கூறி நன்றி கூறி  வருகிறீர்கள். அதுவே எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி!
  5. முக்கியக் குறிப்பு 1 - கடந்த வருடங்களில் ( 2020, 2019, 2018, 2017, 2016, 2015, 2014, 2013 ) வழங்கப்பட்ட வினாத்தாள்களை மாணவர்கள் Print எடுத்து  படித்துப்பார்த்து வினாத்தாள்கள் அமைப்புகள் முந்தைய ஆண்டுகளில் எவ்வாறு உள்ளது என தெரிந்து கொள்ளலாம். [Its Reference Purpose Only]. 




என்றும் ஆசிரியர் - மாணவர் சேவையில்,

அன்புடன் - பாடசாலை ஆசிரியர்கள் குழு.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive