NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.03.2022

  


திருக்குறள் :

குறள் :
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது. 

விளக்கம் :
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது. 

பழமொழி :

Beauty is not a legacy.

சேற்றில் முளைக்கும் செந்தாமரை.

இரண்டொழுக்க பண்புகள் :

1வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

நிறைவேறாத ஆசைகள் நிச்சயம் எல்லோருக்கும் உண்டு.. அதில் மட்டும் தாராளம் காட்டுவதுதான் வாழ்க்கையின் ரகசியம்.!”....... தென்கச்சி கோ சுவாமிநாதன்

பொது அறிவு :

1. உலகிலேயே அதிகம் மாசுபட்ட நதி எது? 

ராவி நதி (பாகிஸ்தான்).

2. கடலில் உள்ள எந்த உயிரினத்தின் பாதுகாப்பகம் அமைக்க 5 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது? 

கடல்பசு.

English words & meanings :

Thunderous - very loud, இடி போன்ற சத்தம், 

Arduous - very difficult, அதிக கடினமான

ஆரோக்ய வாழ்வு :

பழஞ்சோற்றில், சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற தனிமங்களைக் கொண்ட கனிமப்பொருட்கள் அடங்கியுள்ளன. அத்துடன், மனிதரின் தைராயிட் சுரப்புநீரைக் கட்டுப்படுத்துவதன் மூலம், வளர்ச்சிக்கும், வளர்சிதைமாற்றத்துக்கும் உதவும்.

பழைய சோற்றில் நோயெதிர்ப்பிற்கான காரணிகள் அதிகம் உள்ளது. இவற்றை உட்கொள்ளும் போது, அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், உடல் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதோடு, உடலைத் தாக்கும் நோய் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்கின்றன.




கணினி யுகம் :

Center align - Ctrl E. 

Cut - Ctrl X

நீதிக்கதை

உதவியின் சிறப்பு

குறள் :
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது. 

விளக்கம் :
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது. 

கதை :
ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது. 

அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது. 

சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். 

ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது. 

அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது. 

முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான். 

இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர். 

சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான். 

இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான். 

நீதி :
ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.

இன்றைய செய்திகள்

05.03.22

★தமிழகத்தில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருகிறது என கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

★வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தற்காலிக பணியாளர்களாக உள்ள 45 கணினி ஆப்பரேட்டர்களின் பணியை வரன்முறைப்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

★ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் புதர்காடுகள் எரிந்து சாம்பலாகின.

★2024 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம்   
பெங்களுருவில் நாளை நடைபெறுகிறது.

★மீட்புப் பணியில் இந்திய விமானப்படை: உக்ரைனில் இருந்து 630 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.

★கார்கிவ் ரயில் நிலையத்தில் இந்திய மாணவர்கள்   உட்பட வெளிநாட்டவரை பணயக் கைதிகளாக உக்ரைன் அரசு பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

★உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது.

★சென்னையில் 3 நாட்கள் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடக்கிறது.

Today's Headlines

 ★ The Chennai High Court has ruled that child driving is on the rise in Tamil Nadu and has directed that appropriate measures be taken to prevent children under the age of 18 from driving.

 ★ The Chennai High Court has directed the Government of Tamil Nadu to standardize the work of 45 computer operators who are temporary employees in the regional transport offices.

 ★ Hundreds of acres of bushes were burnt to ashes in a wildfire at the Anaimalai Tiger Reserve.

 ★ Consultative meeting to review the plan to provide drinking water connection to all households in the southern states of Tamil Nadu, Kerala, Andhra Pradesh, and Karnataka by 2024.
 It takes place tomorrow in Bangalore.

 ★ Indian Air Force in rescue operation: 630 Indians return home from Ukraine.

 Russian President Vladimir Putin has said that the Ukrainian government is holding foreigners hostage, including Indian students, at the Kharkiv railway station.

 ★ World Cup Sniper: Indian women's team wins gold in air pistol event.

 ★ The state-level volleyball tournament is going on for 3 days in Chennai.
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive