ஆணை : மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , 125 அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த அனுமதி அளித்தும் , மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 5 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 625 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.9300-34800.4800 தரஊதியம் என்ற ஊதிய விகிதத்தில் தற்காலிகமாக நிரப்பப்படும் நாள் முதல் ஒரு வருட காலத்திற்கு தோற்றுவித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டன . மேலும் , ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , 10 அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த அனுமதி அளித்தும் , மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 5 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 50 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.9300-34800.4800 தரஊதியம் என்ற ஊதிய விகிதத்தில் தற்காலிகமாக நிரப்பப்படும் நாள் முதல் ஒரு வருட காலத்திற்கு தோற்றுவித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டன.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» 675 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.05.2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!
675 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.05.2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!
2010-11 ஆம் கல்வியாண்டில்
தரமுயர்த்தப்பட்ட 135 மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 675 முதுகலை
ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.05.2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை
வெளியீடு!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...