NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SMC - பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு பின்பற்ற வேண்டிய முக்கியமான நடைமுறைகள் ( 20.02.2022 )

 பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு பின்பற்ற வேண்டிய முக்கியமான நடைமுறைகள் – SMC MEETING

மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் 20.3.2022 காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்தப் பெற வேண்டும்.

தலைமையாசிரியர் , அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அனைத்து நிலை பணியாளர்களும் பள்ளியில் வருகை புரிய வேண்டும்

இதற்கான அழைப்பிதழை அனைத்து பெற்றோர்களுக்கும் மாணவர்கள் வழியாகவோ நேரிலோ வழங்க வேண்டும் அத்தோடு உள்ளாட்சி பிரதிநிதிகள் கல்வி தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் போன்ற கல்வியின் மீது நாட்டம் உள்ளவர்களையும் அழைப்பது பள்ளியின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும்.

பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு

தற்போது நடைமுறையில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு என்பது புதுப்பிக்கப்பட வேண்டியது என்பதனால் அவர்களை தேவைக்கேற்ப  அழைத்துக் கொள்ளலாம்.தற்போது இருக்கும் SMC மாற்றப்படவுள்ளதை நினைவில் கொள்ளவும்

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் அனுப்பப்பட்டுள்ளது அவற்றை தெளிவாக ஒரு முறைக்கு இரு முறை அனைத்து தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் தெளிவுபடுத்திக் கொள்வது சிறப்பாக இருக்கும்

ஊரில் முக்கிய இடங்களில் குறிப்பாக பொதுமக்கள் கூடும் இடங்களில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு பதாகைகள், சுவரொட்டிகளை வைப்பது நன்றாக இருக்கும்

புதிய பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பில் அனைவரும் மாநில திட்ட இயக்குனரின் வழிகாட்டுதல்படி மறுகட்டமைப்பு செய்யப்படவேண்டும்.

பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கட்டமைப்பில் வருகை புரியும் பெற்றோர்களையும், உள்ளாட்சி பிரதிநிதிகளையும் கொண்டு பள்ளி இடைநின்ற மாணவர்கள் , பள்ளி செல்லாக் குழந்தைகள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் பற்றிய தேவைகள் செயல்பாடுகள் பள்ளி வளர்ச்சித் திட்டங்கள் பற்றி பேசலாம்

வழங்கப்பட்டுள்ள  நிதியை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கூட்டத்திற்கும் பதாகைகள், சுவரொட்டிகள், அழைப்பிதழ்கள் தயாரித்தல் பணிக்கும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ள மறுகட்டமைப்பு பணிக்காகவும் பயன்படுத்த வேண்டும்

நடைபெறக்கூடிய ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படம் எடுப்பது காணொளிகள் தயாரிப்பது போன்றவைகளின் மூலம் ஆவணப் படுத்தி கொள்வது சிறப்பாக இருக்கும் மேலும் உயர் அலுவலர்கள் கல்வியாளர்கள் போன்றவர்களையும் அழைத்து பள்ளியின் சிறப்புகளைப் பற்றியும் தேவைகளைப் பற்றியும் பேச வைக்கலாம்.

ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர்கள் மாநில திட்ட இயக்குநர் அவர்களால் அனுப்பப்பட்டுள்ள கடிதங்களை நகல் எடுத்து வைத்துக் கொள்வது அவசியம் பெற்றோர்கள் கேட்கின்ற ஐயங்களுக்கு அவற்றை வைத்து நீங்கள் விளக்கம் சொல்வது என்பது சரியாக இருக்கும்.

பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு

அனைவரையும் கண்ணியத்தோடு நடத்துவதை தலைமையாசிரியர் உறுதி செய்ய வேண்டும் மறுகட்டமைப்பு பணி நிறைவு பெற்ற பின்பு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள இருபது உறுப்பினர்களும் பள்ளியைப் பற்றிய வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுவர் அவர்களின் புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொள்வது நன்று ஏனென்றால் அவர்களின் பதவி மற்றும் புகைப்படத்தை emis தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்

20.3.22 அன்று மாலைக்குள் தலைமை ஆசிரியர்கள் emis தளத்தில் பங்கேற்ற பெற்றோர்களின் எண்ணிக்கை விவரத்தினை tn emis app ல் upload செய்ய வேண்டும்.

அன்று மட்டுமே அவற்றை அப்டேட் செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

TN EMIS SCHOOL APP

|

OPEN SMC PARENT MEET ATTENDANCE

|

ENTER TOTAL NO OF PARENTS ATTEND THE MEETING.

மேலும் ஏற்படக்கூடிய சந்தேகங்களுக்கு மாநில திட்ட இயக்குநரின் கடிதத்தைப் படித்து தெளிவு பெற்று எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் மிகவும் கவனத்தோடு நிகழ்வுகளை நடத்தி முடித்து emis தளத்தில் upload செய்து  தங்கள் பணியை சிறப்பாக செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive