Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.04.22

  

 

 

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: சூது

குறள்: 933

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.

பொருள்:
பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும் வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும்

பழமொழி :

When the well is full, it will run over.

நிரம்பிய நீர் வழிந்துதான் போகும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. முயற்சி பயிற்சி இரண்டும் பாதியில் விட மாட்டேன். தொடங்குவதில் இல்லை வெற்றி தொடர் தில் தான். 

2. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே

பொன்மொழி :

யாரையும் வெறுப்பது கூடாது. அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். தனித்து வாழாதீர்கள். மனம் விட்டு பிறரிடம் பழகுங்கள்.____அன்னை தெரேசா

பொது அறிவு :

1. இந்தியாவின் நயாகரா என்றழைக்கப்படும் அருவி எது?

 ஒகேனக்கல்.

 2.தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் எது? 

சுதேச மித்திரன்.

English words & meanings :

quash-stopping something by force, அடக்கு, 

quell- end something. ஒன்றை முடித்திடுதல் 

ஆரோக்ய வாழ்வு :

வெட்சி பூ உடல் சோர்வு, காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தக்கூடியது. உடல் அசதி, கழிச்சல், சீத கழிச்சல் ஆகியவை இருக்கும் போது வெட்சிப்பூ தேநீரை காலை, மாலை என இருவேளைகள் குடிக்க வேண்டும்.பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கிய வெட்சி பூவை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும். கருப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும். புற்றுநோய் வராமல் தடுக்கும். வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்தாக இது விளங்குகிறது.
கணினி யுகம் :

Ctrl + Home - Move to the first character. 

 Ctrl + End - Move to the last character. 

நீதிக்கதை

கைக்கடிகாரம்

ஒரு நாள் ஒரு விவசாயி தன் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார். அது அவரது திருமணத்தின்போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைக்கடிகாரம். அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார். அவருக்கு அந்த கைக்கடிகாரம் கிடைக்கவில்லை.

மோட்டார் கொட்டகைக்கு அருகில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களை அழைத்து, என் கைகடிகாரம் தொலைந்துவிட்டது. அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன் என்றார்.

சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து, எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லைஎன்று சொல்லி விட்டு கிளம்பி விட்டனர்.

ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து, எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். நான் தேடி தருகிறேன் என்றான். விவசாயியும், சரி! நீ போய் தேடிப்பார் என்றார். மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான். அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன், எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது? என்று கேட்டார்.

நான் உள்ளே சென்று தரையில் அமைதியாக உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன். எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று. பிறகு சுலபமாக கண்டுபிடித்து எடுத்து வந்தேன் என்றான்.

நீதி :

அமைதியான மனநிலையில் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியும்.

இன்றைய செய்திகள்

27.04.22

🔸கோடை மின் தேவைக்காக 4.8 லட்சம் டன்கள் வெளிநாட்டு நிலக்கரி இறக்குமதி: தமிழக அரசு தகவல்.

🔸மலேரியா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட தமிழக அரசுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

🔸தமிழக விமான நிலையங்கள் ரூ.7,000 கோடியில் மேம்படுத்தப்படும்: விமான நிலைய ஆணையக் குழும தென்மண்டல செயல் இயக்குநர் தகவல்.

🔸6 - 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

🔸கவச வாகன அழிப்பு ஏவுகணைகள்: ராணுவம் மற்றும் விமானப் படையில் சேர்ப்பு.

🔸பெய்ஜிங்கிலும் கரோனா அதிகரிப்பதால் ஊரடங்கு அச்சம் - சீனாவில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு.

🔸சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; அரையிறுதிக்குள் நுழைந்த மேற்கு வங்கம், கர்நாடகா அணிகள்.

Today's Headlines

🔸For the summer power supply 4.8 lakh tonnes of foreign coal was imported - information to Government of Tamil Nadu

🔸 The National Award has been given on behalf of the Central Government to the Government of Tamil Nadu for its outstanding work to prevent malaria  

🔸 Tamil Nadu Airports will be upgraded at the cost of Rs 7,000 crore: Airports Authority Board for Southern Regional Executive Director's Information.

 🔸It has been reported that the Federal Drug Control Board has approved the vaccination of covaxin for children between the ages of 6 and 12.

 🔸Armored anti-aircraft missiles: enlisted in the Army and Air Force.

 🔸Fear of lockdown as corona rises in Beijing - Food shortages in China.

 🔸Santosh Cup Football Series;  West Bengal and Karnataka enter the semi-finals.
 
 Prepared by

Cover women ICT_போதிமரம்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive