தமிழ்நாடு அரசுப்பணியாளர்
தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா
நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு பொதுப் பணியில் அடங்கிய இரண்டாம்
நிலை அரசு உதவி வழக்கு நடத்துனர் முதன்மை தேர்வு (விரிந்துரைக்கும் வகை)
முறையே வருகிற 7ம் தேதி (முற்பகல் மற்றும் பிற்பகல்) மற்றும் வருகிற 8ம்
தேதி (முற்பகல் மற்றும் பிற்பகல்) நாட்களில் சென்னை தேர்வு மையத்தில்
மட்டும் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்
தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைதளமான www.tnpsc.gov.in
மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (ஓடிஆர்) மூலமாக மட்டுமே
விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு
சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Guides / Study Materials Download
Home »
Padasalai Today News
» அரசு உதவி வழக்கு நடத்துனர் தேர்வு இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...