NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.04.22

   திருக்குறள் :

அதிகாரம்:
அடக்கம் உடைமை

திருக்குறள்:124

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

விளக்கம்:

உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.

பழமொழி :

Without wisdom, wealth is worthless.

விவேகம் இல்லாச் செல்வம் வீணே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. முயற்சி பயிற்சி இரண்டும் பாதியில் விட மாட்டேன். தொடங்குவதில் இல்லை வெற்றி தொடர் தில் தான். 

2. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே

பொன்மொழி :

மனிதனின் உடன்பிறந்த இயல்பு ஆசை. அதை படிப்படியாக திருத்திக் கொண்டால் மட்டுமே வாழ்வில் உயர முடியும்.____ புத்தர்

பொது அறிவு :

1.இறகு இல்லாத பறவை எது? 

கிவி பறவை

2. இந்தியாவில் முதல் மருத்துவக் கல்லூரி எங்கு தொடங்கப்பட்டது? 

சென்னை.

English words & meanings :

pacify - make the angry person calm, அமைதி படுத்துதல், 

pantry - a small room where food is kept, உணவு சேமிப்பு அறை.

ஆரோக்ய வாழ்வு :

விளக்கெண்ணெயை தலைமுடிக்கு அடிக்கடிப் பயன்படுத்தி வந்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக பட்டுப் போன்று இருக்கும்.விளக்கெண்ணெய் குடலில் உள்ள புழுக்களை அழிப்பதுடன், மலச்சிக்கலில் இருந்தும் விடுவிக்கிறது.உடலில் பித்தம் அதிகரிக்கும்போது சூட்டைத் தணிக்க இரவில் உள்ளங்காலில் விளக்கெண்ணெயை கொஞ்சம் தடவிட்டு தூங்கலாம் நல்ல பலன் கிடைக்கும்.

கணினி யுகம் :

Ctrl + 1 - Single - spaceline.

 Ctrl + 2 - Double-space lines 

ஏப்ரல் 26





செர்னோபில் அணு உலை விபத்து என்பது1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள பிப்யாட் என்னும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தைக் குறிக்கும்.
இது உலகின் மிக மோசமான அணு உலை விபத்து எனச் சொல்லப்படுகின்றது. அனைத்துலக அணு ஆற்றல் நிகழ்வு அளவீட்டில் 7 ஆவது நிலையை எட்டிய ஒரே விபத்தான இதன் விளைவாக மோசமான கதிரியக்கம் சூழலுக்குள் வெளியேறியது. இந்நிகழ்வின் போது ஏற்பட்ட வெடிப்பினால் 30 பேர் இறந்தனர். எனினும் இவ்விபத்தினால் ஏற்பட்ட பின்விளைவுகளினால் இறந்தவர் தொகை அதிகமாகும். 2000 நபர்கள் இறந்தனர். இரத்தக்குழாய் வெடித்து அதிக அளவு இரத்தப்போக்கு, உறுப்புச் சிதைவு, முடி கொட்டுதல், கண்புரை, இரத்தத்தில் இயல்புக்கு மாறான நிலைகள், தோல்புற்று நோய், சீழ்பிடித்து ரணமாதல், கதிர்வீச்சு நோய் முதலிய நோய்கள் உருவாகின. இதன் காரணமாகா காற்று நீர் ஆகியவற்றில் கதிரியக்க மாசு படிந்து தாவரங்களையும், விலங்குகளையும் பாதித்தது. உயிரிகள் துன்புற்றன.

நீதிக்கதை


வாழ்க்கை வாழ்வதற்கே!

ஒரு கல்லூரியில் ஒன்றாக படித்த சில மாணவர்கள், படித்து முடித்து சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கல்லூரியில் சந்திக்கின்றனர். அப்போது, கல்லூரி வாழ்க்கையைப் போல வெளி உலக வாழ்க்கை சந்தோசமானதாக இல்லை என்றும் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கின்றது என்றும் அலுத்துக் கொள்கின்றனர். 

அப்போது அங்கு வந்த அவர்களது முன்னாள் பேராசிரியர் அவர்களை தன் வீட்டிற்கு தேநீர் விருந்துக்கு அழைக்கிறார். சுவையில் சிறந்த அவர் வீட்டு தேநீர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது. அவரது வீட்டில் தேநீர் பல்வேறு விதமான கோப்பைகளில் பரிமாறப் படுகின்றது. சில கோப்பைகள் சாதாரணமானவை, சில கோப்பைகள் அழகானவை, சில கோப்பைகள் விலை உயர்ந்தவை, வேறு சிலவோ பிரத்யேகமாக கலை அழகோடு வடிவமைக்கப் பட்டவை. 

அந்த மாணவர்கள், அழகற்ற கோப்பைகளை தவிர்த்து விட்டு அழகிய கோப்பைகளிலேயே தேநீர் அருந்த விரும்புகின்றனர். கலை வடிவம் மிக்க தேநீர் கோப்பைக்காக அவர்களிடையே சிறிய போட்டி கூட நடக்கிறது. ஒருவழியாக, தமக்கான கோப்பையை தேர்வு செய்து, மாணவர்கள் அனைவரும் தேநீர் அருந்தும் போது அங்கு வந்த பேராசிரியர் சிறிய விளக்க உரை நிகழ்த்துகிறார். 

இங்கே, ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். நீங்கள் அனைவரும் அழகில் சிறந்த, விலை உயர்ந்த கோப்பைகளிலேயே தேநீர் அருந்த விரும்பினீர்கள். ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கென சிறந்ததையே தேர்ந்தெடுக்க விரும்புகிறான். இது மிகவும் இயல்பான விஷயம்தான் என்றாலும் பல பிரச்சினைகளின் மூல காரணம் அதில்தான் உள்ளது. 

உண்மையில், என் வீட்டிற்கு நீங்கள் வந்தது சுவையான தேநீரை அருந்தவே. கலை நயம் மிகுந்த கோப்பைகளை உபயோகிக்க அல்ல. ஆனாலும், தேநீர் அருந்த வந்த உங்கள் கவனம், கோப்பைகளைப் பார்த்தவுடன் திசை மாறி விட்டது. அதிலும், உங்கள் கையில் உள்ள கோப்பை மீது இருந்த கவனத்தை விட அடுத்தவர் கையில் என்ன கோப்பை உள்ளது என்பதில்தான் அதிக கவனம் இருந்தது. 

நண்பர்களே! இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்க்கை என்பது கூட சுவையான தேநீர் போன்றது. இடையில் வந்து போகும் பதவி, பணம், புகழ் எல்லாமே அந்த வாழ்க்கையை தாங்கிப் பிடிக்க உதவும் கோப்பைகள் மட்டுமே. 

மேற்சொன்ன பணம், பதவி போன்ற விஷயங்கள் எதுவும் வாழ்க்கை எனும் தேநீரின் சுவையை மாற்றுவதில்லை. ஆனால் பல சமயங்களில், கோப்பைகளில் அதிக கவனம் செலுத்தும் நாம் வாழ்க்கையை முழுமையாக சுவைக்க மறந்து விடுகிறோம். பலர் இது போல காலப் போக்கில் வாழ்க்கை எனும் தேநீரின் உண்மையான சுவை மறந்து போய் இயந்திரகதியாக வாழ ஆரம்பித்து விடுகிறார்கள். 

ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்! மகிழ்ச்சியாக வாழும் மனிதர்களுக்கு எல்லாவற்றிலும் உயர்ந்த விஷயங்கள் கிடைப்பதில்லை. அவர்கள் தங்களுக்கு கிடைத்த தேநீரை முழுமையாக சுவைப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதை தாங்கிப் பிடிக்கும் கோப்பைகளில் அல்ல. 

அதிகமான பொருட்கள் வைத்திருப்பவன் உண்மையான பணக்காரன் இல்லை. குறைவாக தேவைகள் உள்ளவனே பெரிய பணக்காரன். இவ்வாறு அவர் உரைத்ததும், அந்த மாணவர்களுக்கு வாழ்க்கை பற்றி கொஞ்சம் விளங்கியது போல இருந்தது. இந்த முறை தேநீரின் சுவையை முழுமையாக ருசித்து பின்னர் கலைந்து போனார்கள்.

இன்றைய செய்திகள்

26.04.22

🌼வண்டலூர் உயிரியில் பூங்கா விலங்குளின் நேரலைக்கு இதுவரை 6 கோடி பார்வையாளர்கள்: தமிழக அரசு தகவல்.

🌼சென்னையில் பாய்மரப் படகோட்டுதல் அகாடமிக்கு ரூ.7 கோடி; உதகையில் ரூ.5 கோடியில் மலை மேலிடப் பயிற்சி மையம்: அரசு தகவல்.

🌼காற்றாலை சீசன் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நீங்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

🌼குழந்தைகளுக்கான கோடை கால அஞ்சல் தலை சேகரிப்பு முகாம் 30 வரை விண்ணப்பிக்க அவகாசம்.

🌼புதிய தொழிலாளர் சட்டம் ஜூலை 1-ல் அமல்படுத்தப்பட்டால் ஊழியர்களின் பணி நேரம் அதிகரிக்கப்பட்டு கூடுதல் வார விடுமுறை கிடைக்க வாய்ப்பு.

🌼ராணுவச் செலவினம்: உலகளவில் இந்தியா 3-ம் இடம்; 5-வது இடத்தில் ரஷ்யா - ஆய்வறிக்கை தகவல்.

🌼நைஜீரியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிவிபத்து: 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

🌼கேலலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு பெங்களூருவில் தொடங்கியது.

🌼ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் சாம்பியன்.

🌼லாரஸ் உலக திருப்புமுனை விருதை வென்றார் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை எம்மா ரடுகானு.

Today's Headlines

🌼6 crore visitors to Vandalur Wildlife Sanctuary in the live channel so far: as per Tamil Nadu Government Information.

🌼 Rs 7 crore allotted for sailing academy in Chennai;  Rs 5 crore hilltop training centre in Udagai: Government's Information.

 🌼With the wind season to begin in next month, the power cut in Tamil Nadu will end, Electricity officials hope so. 

 🌼Opportunity to apply up to 30th April for summer postage stamp collection camp for children.

 🌼If the new labour law goes into effect on July 1, employees' working hours will be increased thus they will get additional weekends as holidays. 

 🌼Military Expenditure: India ranks 3rd globally;  Russia in 5th place - dissertation information.

 🌼Explosion at Nigeria oil refinery: More than 100 killed.

🌼 Gallelo Indian University Games started in Bangalore.

 🌼Stuttgart Open Tennis: Iga SwiTech Champion.

🌼 British tennis player Emma Radukanu wins Larus World Breakthrough Award
 
 Prepared by

Cover women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive