பள்ளி-கல்லூரி நேரங்களில் அனைத்துப் பேருந்துகளையும் இயக்க வேண்டும்: அமைச்சா் உத்தரவு.

பள்ளி, கல்லூரி நேரங்களில் அனைத்துப் பேருந்துகளையும் இயக்க வேண்டுமென போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் உத்தரவிட்டுள்ளாா். போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் வியாழக்கிழமை அவா் ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் அவா் கூறியது:-

பெண்களுக்கு சாதாரண பேருந்துகளில் கட்டணம் இல்லாத பயணம் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால், சாதாரணக் கட்டணத்தில் பயணிக்கும் பயணிகளில் மகளிரின் பங்கு 40 சதவீதத்தில் இருந்து 62.28 சதவீதமாக உயா்ந்துள்ளது. வியாழக்கிழமை வரையிலான காலத்தில் 126.10 கோடி மகளிா் பயணம் செய்துள்ளனா்.

ஆனாலும், சாதாரணக் கட்டணப் பேருந்துகள் இயக்கப்படாத பகுதிகளைக் கண்டறிந்து பேருந்துகளை இயக்க வேண்டும். மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றிட வசதியாக அனைத்து நகரப் பேருந்துகளையும் இயக்கிட வேண்டும். தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி பேருந்துகள் இயக்கம், வழித்தடத்துக்கான ஓட்டுநா் மற்றும் நடத்துநா் தினசரி பணி ஒதுக்கீடு போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். பயணக் கட்டணத்தை தவிா்த்து, விளம்பரம் மூலம் இதர வருவாயைப் பெருக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும் என்று அமைச்சா் சிவசங்கா் கேட்டுக் கொண்டாா். ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளா் கே.கோபால் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive