ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆசிரியர்களுக்கான புதிய வருகை பதிவு முறை.. 2023 முதல் அமல் – மாநில கல்வித்துறை அறிவிப்பு!


ஜார்கண்ட் மாநிலத்தில் ஆசிரியரின் வருகையை பதிவு செய்ய புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சம் என்னவெனில் ஆசிரியர்கள் பள்ளியில் இருப்பது தானாகவே பதிவிடப்படுகிறது. தங்கள் ஸ்மாட் போன்கள் மூலம் ஆசிரியர்கள் இதனை அறியலாம்.


 மாணவர் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடு தினசரி ஏடுகளில் பராமரிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆசிரியர்களின் வருகை ஆன்லைன் வாயிலாக அப்டேட் செய்யப்பட்டு வந்தது. பிறகு மாநிலம் வாரியாக செயலிகளை உருவாக்கி அதன் வாயிலாக தங்களது வருகையை பதிவு செய்து ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் ஆசிரியர் உரிய நேரத்தில் தனது கைரேகையை அந்த இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும். அதே போல பள்ளியை விட்டு வெளியேறும் போதும் கைரேகை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆசிரியர்களுக்கென்று புதிய வருகை பதிவேடு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை அவர்கள் இ- வித்யா வாஹினி செயலி மூலம் தங்களது வருகை பதிவு செய்து வந்தனர்.அதற்கு பதிலாக தற்போது ஜியோ பென்சிங் என்ற முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தின் 100 மீட்டர் வரம்புக்குள் இருந்தால் தானாகவே அவர்களின் வருகை பதிவு செய்யப்படும். அப்போது பச்சை நிறத்தில் ஸ்மார்ட் போனில் ஒளி தென்படும். அதே போல் அவர்கள் பள்ளியில் இல்லாத போது ஸ்மார்ட் போன்களில் சிவப்பு நிற ஒளி தோன்றும். இந்த புதிய வருகை பதிவு முறை 2023 ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive