ஈராசிரியர்பள்ளிகளை இணையுங்கள் - சிறப்பு கட்டுரை!

பள்ளிகளில் கற்பித்தல் நடைபெற வேண்டும். கற்பித்தல் அல்லாத பணிகளில் ஆசிரியர்கள் கணிசமான நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. பாடம் சொல்லிக் கொடுப்பதை விட பதிவேடுகள் பராமரிப்பதிலும் தகவல் குறிப்புகள் அனுப்பவதிலும் ஆசிரியர்கள் நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. 

தமிழ்நாட்டில் 20 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாக உள்ளன. 

வகுப்புக்கு ஒர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் கற்பிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். 

கிராமத்திற்கு மூன்று, நான்கு தொடக்கப் பள்ளிகள் உள்ளன. பள்ளிக்கு 20 - 30 குழந்தைகள் படிக்கிறார்கள். எனவே பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கும் நிலை உள்ளது. 

மூன்று, நான்கு பள்ளிகளையும் இணைத்து ஒரே பள்ளியாக மாற்றி வகுப்புக்கு ஒர் ஆசிரியர், பாடத்திற்கு ஓர் ஆசிரியர் நியமனம் செய்யலாம். கல்வித் தரம் நிச்சயமாக உயரும். 

ஒரு குழந்தைக்கு ஒரு கிலோ மீட்டருக்குள் தொடக்கப் பள்ளி இருக்கவேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது. ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பள்ளி இல்லை என்றால் அரசின் செலவில் குழந்தைகளுக்கு வாகன வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். 

வசதியான குழந்தைகள் 20, 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியார் பள்ளிக்கு வாகனங்களில் சென்று படிக்கிறார்கள்.

அனைத்துக் குழந்தைகளுக்கும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஒரு தொடக்கப்பள்ளி இருப்பதை உறுதி செய்யவேண்டும். 

அரசுப் பள்ளி, தனியார் பள்ளி எதுவாக இருந்தாலும் பள்ளியிலிருந்து மூன்று கிலோமீட்டர் எல்லைக்குள் வாசிக்கக் கூடிய குழந்தைகளை மட்டுமே சேர்க்க வேண்டும் என்று சேர்க்கைப் பகுதி எல்லை வரையறை செய்யவேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive