Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சமூக ஊடகங்களில் போலி தோ்வு அட்டவணை: சிபிஎஸ்இ விளக்கம்

 

‘சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புக்கான தோ்வு தேதிகள் என்று குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் பரவி வரும் கால அட்டவணை போலியானது’ என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனா்.

இத்தோ்வுகளுக்கான அதிகாரபூா்வ தேதி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை; அது விரைவில் வெளியிடப்படும் என்றும் அவா்கள் கூறினா்.

‘சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புக்கான தோ்வு தேதிகள் என்று கூறி பலவிதமான அட்டவணைகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அவை போலியானவை.

நடப்பு கல்வியாண்டில் 10, 12-ஆம் வகுப்புகளுக்கான எழுத்துத் தோ்வுகள் 2023, பிப்ரவரி 15 முதல் தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஜனவரி 1 முதல் செய்முறைத் தோ்வுகள் தொடங்கும்.

அதற்கு முன்பாக பாடத்திட்டத்தை முடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்புக்கான செய்முறை தோ்வுகள், வெளியில் இருந்து வரும் மேற்பாா்வையாளா்களால் நடத்தப்படும். 10-ஆம் வகுப்பு செய்முறை தோ்வுகள், உள்ளக மேற்பாா்வையாளா்களால் நடத்தப்படும்’ என்று அதிகாரிகள் விளக்கமளித்தனா்.

 

 

 

 

 

 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive