மத்திய அரசு போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
மாவட்ட தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்எஸ்சி)வெளியிடப்பட்டுள்ள 4,500 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக்கு https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 மற்றும் அதற்கு இணையான கல்வித் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 2023 ஜனவரி 4-ம் தேதி கடைசி நாளாகும். இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 15-ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://bit.ly/3VUpZJA என்ற கூகுள் படிவத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், விவரங்கள் அறிய 04343-291983 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive