வினாத்தாளை புகைப்படம் எடுக்க தடை அரையாண்டு தேர்வில் கல்வித்துறை உஷார்

 dpi

அரையாண்டு தேர்வு வினாத்தாள்களை மொபைல் போனில் புகைப்படம் எடுக்க பள்ளிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தனியார் பள்ளிகளில் இன்றும்; அரசு பள்ளிகளில் டிச.16ம் தேதியும் துவங்கஉள்ளது. தேர்வுக்கான வினாத்தாள்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் என்ற சி.இ.ஓ.க்கள் சுற்றறிக்கை அனுப்பிஉள்ளனர்.

இதன்படி வேலுார் பள்ளிகளுக்கு சி.இ.ஓ. முனுசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கல்வித்துறை வழங்கியுள்ள கால அட்டவணைப்படி மட்டுமே குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட பாடங்களுக்கு தேர்வுகள் நடத்த வேண்டும்.

தேர்வு நடக்கும் நாளில் காலை 8:00 மணிக்கும் பிற்பகல் 12:00 மணிக்கும் வினாத்தாள்களை கட்டுக்காப்பு மையத்தில் இருந்து தனி நபர் வாயிலாக பெற்றுச் செல்ல வேண்டும்.பிற்பகல் தேர்வுக்கு காலையிலேயே வினாத்தாள்களை எடுத்து வைக்கக்கூடாது. வினாத்தாள்களை எந்த காரணம் கொண்டும் மொபைல் போனில் புகைப்படம் எடுக்க கூடாது. அரையாண்டு தேர்வுகளை எந்த புகாரும் இன்றி நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொது தேர்வு மட்டுமின்றி காலாண்டு அரையாண்டு தேர்வுகளிலும் வினாத்தாள்கள் முன்கூட்டியே 'லீக்' ஆகாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் பள்ளிக்கல்வித் துறைக்கு ஏற்பட்டுஉள்ளது.

கல்வித்துறை சார்ந்த ஆசிரியர் அல்லது பணியாளர்கள் சிலர் ஆர்வத்தில் வினாத்தாள்களை புகைப்படம் எடுப்பதால் அவை தேர்வுக்கு முதல் நாள்அல்லது தேர்வு நடக்கும் நேரத்துக்கு முன் சமூக வலைதளங்களில் லீக் ஆகும் அபாயம் உள்ளது. அதைத் தடுக்க கல்வித்துறை உஷாராக இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive