NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு திருமணம் புரிந்தோருக்கு முன்னுரிமை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு திருமணம் புரிந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பணி நியமங்களிலும் கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என டாக்டர் அம்பேத்கார் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கெளதம சித்தார்தனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த மார்ச் மாதம் 7,382 பணியிடங்களுக்கான குரூப் 4 விண்ணப்பங்கள் வரவேற்றபோது கலப்பு திருமணங்கள் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.  

அப்போது வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமங்களுக்கு மட்டுமே  கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட முகாமைகள் மூலமாக மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்ற அரசின் நிலைப்பாட்டை விளக்கமகா பதிவு செய்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுதாரர் கலப்பு திருமணம் புரிந்தவர் இல்லை, இதனால் இந்த வேலை வாய்ப்பு நடைமுறையில் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டுவதாக எந்த தகவலும் இல்லை. அடிப்படையில், இந்த வழக்கை தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்ல என கூறி, பணி நியமனம் சம்பந்தமாக பொதுநல வழக்கும் தாக்கல் செய்யமுடியாது என்றும் தெரிவித்து கெளதம சித்தார்தனன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive