
திருப்பூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நல தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் நான்கு தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 7,500 ரூபாய் தொகுப்பூதியத்தில், தற்காலிக இடைநிலை ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர்.
விருப்பமுள்ளோர், வரும் 18ம் தேதிக்குள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், அறை எண் 113, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் என்கிற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலில், கல்வித்தகுதி உள்ளிட்ட சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
விபரங்களுக்கு, 7338801274 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது







How to learn bachelor of education in distance education mode sir ?
ReplyDelete