Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.03.2023


 

 

    திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல்

 அதிகாரம்: ஒழுக்கம் உடைமை

குறள் எண்: 136

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.

பொருள்:
ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

பழமொழி :

The early bird catches the worm 

முந்தி முயல்வோர்க்கே முதல் வெற்றி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மழை காலத்திற்கு என்று உணவை சேமிக்கும் எறும்பை போல மாணவ பருவத்திலேயே சேமிக்க பழகுவேன். 

2. கனி தரும் மரங்கள் போல மற்றவர்க்கு எப்போதும் பயன் தர முயற்சிப்பேன்.

பொன்மொழி :

ஒருவனை அகந்தை ஆட்கொண்டால் – அழிவு அவன் தலைமுறையையும் ஆட்டுவிக்கும்.

பொது அறிவு :

1. கடித உரைகளை கண்டுபிடித்தவர் யார்? 

 பியர்சன்.

 2. ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திட்ட ஒரே இந்திய பிரதமர் யார்? 

 Dr. மன்மோகன் சிங்.

English words & meanings :

catheter - a flexible tube inserted into bladder to remove fluid. noun. medicine. சிறுநீர் நீக்க குழாய். பெயர்ச் சொல். மருத்துவம்

ஆரோக்ய வாழ்வு :

சீனாவில் நடந்த ஆய்வில், பிற்பகலில் தூங்குவோருக்கு இருப்பிடம் சார்ந்த விழிப்புணர்வு எப்போதும் சிறப்பாக இருக்கும். அத்துடன் பேசுவதை சரளமாகவும் பேசவும், நினைவாற்றலுக்கும் தொடர்புடையதாக பகல் தூக்கம் விளங்குகிறது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு எடுக்கப்பட்ட அறிவாற்றல் செயல்திறன் சோதனையில் பிற்பகலில் தூங்குவோரே அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி பிற்பகலில் தூங்குவோருக்கு செயல் திறன்கள் அதிகரிப்பு, நினைவாற்றல் அதிகரிப்பு, சிக்கலான சூழ்நிலைக்கு தீர்வு காண்பது, இருப்பிடம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் சரளமான பேச்சு போன்றவை அதிகமாக காணப்பட்டது. பிற்பகலில் தூங்காதவர்களுக்கு, அவர்களைக் காட்டிலும் இவை அனைத்தும் குறைவாகவே காணப்பட்டது.


  மார்ச் 01



பாகுபாடுகள் ஒழிப்பு நாள்

பாகுபாடுகள் ஒழிப்பு நாள் (Zero Discrimination Day)  என்பது ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். உலக நாடுகளில் சட்டத்திலும், நடைமுறையிலும்  மனித சமுதாயத்தில் தொடர்கிற பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அறைகூவல் விடுக்கும் நாளாக இது உள்ளது.  இந்த நாள் 2014 மார்ச் 1 அன்று முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இதை   பெய்ஜிங்கில் ஒரு முக்கிய நிகழ்வுடன் அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி ஐநா எய்ட்ஸ் விழிப்புணர்வு/கட்டுப்பாடு அமைப்பின் (யுனெய்ட்ஸ்) நிறைவேற்று இயக்குனரான மைக்கேல் சிடிப் என்பவரால் தொடங்கப்பட்டது

நீதிக்கதை

நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை

தெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான். அதில் ஏறி சவாரி செய்யப் பழகிக் கொண்டிருந்தான். அப்போது அரசர் தன் விலை உயர்ந்த குதிரை மேல் ஏறிக் கொண்டு இராமனையும் உடன் வருமாறு அழைத்தார். ராமனும் தன் குதிரை மீது ஏறிக் கொண்டு மன்னருடன் சென்றான். 

அரசரின் குதிரை அழகாக நடை போட இராமனின் குதிரையோ தளர்ந்த நடை போட்டது. இராமா! போயும், போயும் இந்த வற்றிப் போன தொத்தல் குதிரைதானா உனக்குக் கிடைத்தது. இதனை வைத்துக் கொண்டு நீ எப்படி சவாரி செய்யப் போகிறாய்? உடனே ராமனுக்கு ரோஷம் வந்து விட்டது. 

அரசே! இந்தக் குதிரை பயன்படுவது போல உங்கள் குதிரை பயன் படாது. என்று தன் குதிரையைப் பற்றி மிக உயர்வாகப் பேசினான். எப்படிச் சொல்கிறாய்? இதை உன்னால் நிரூபிக்க முடியுமா? முடியும், வேண்டுமானால் பாருங்கள். உங்கள் குதிரையால் செய்ய முடியாததை என் குதிரையைச் செய்ய வைக்கிறேன். அப்படியா சொல்கிறாய்? நூறு பொன் பந்தயம் கட்டுகிறேன் செய் பார்க்கலாம். என்றார். 

இருவரும் பேசியவாறு மெதுவாக வந்து கொண்டிருந்தனர். அப்போது குதிரைகள் இரண்டும் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தன. கீழே பார்த்தால் பயங்கர சுழல். ராமன் சட்டென்று குதிரையை விட்டுக் கீழே இறங்கினான். பாலத்தின் ஓரத்திற்குக் குதிரையைக் கொண்டு சென்றார். அரசர் திகைத்தார். ராமன் தன் குதிரையை நீருக்குள் தள்ளி விட்டுடான். அரசர் பதறினார். 

இராமா!, என்ன இது, ஏன் இப்படிச் செய்தாய்? அரசே! என் குதிரை செய்தது போல உங்கள் குதிரை செய்ய முடியுமா? உங்கள் ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரையால் செய்ய முடியாததை என் குதிரை செய்து விட்டது பாருங்கள். 

ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரை மட்டுமல்ல, அரசரின் நண்பனாகவும் பழகிய அறிவுள்ள குதிரை அது. அதை இழக்க அரசர் விரும்புவாரா? பந்தயத்தில் சொன்னபடி நூறு பொன் நாணயங்களைக் கொடுத்தார். அரசர், இருந்தாலும் ஒரு உயிரைக் கொல்வது தவறில்லையா இராமா? என்றார். அரசர் வருத்தத்தோடு. அரசே! நோய்வாய்ப்பட்டு வயோதியான நிலையில் இருக்கும் இந்தக் குதிரையை யாரும் இனி வாங்க மாட்டார்கள். 

இது இறந்தால் எனக்கு ஐம்பது நாணயங்கள் நஷ்டம். இப்போது எனக்கு நூறு பொன் கிடைத்து விட்டது. அத்துடன் அந்தக் குதிரையைப் பராமரிக்கும் செலவும் இனி இல்லை. குதிரைக்கும் துன்பம் நீங்கி விட்டது. எனவேதான் இப்படிச் செய்தேன். என் குதிரையின் உயிர் நஷ்டம் எனக்கு இரு மடங்கு லாபமாயிற்று. என்றான்.

இன்றைய செய்திகள்

01.03.2023

* 1.50 கோடி பேர் ஆதாரை இணைக்கவில்லை; இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது: அமைச்சர் செந்தில் பாலாஜி.

* 5 ஆண்டுகளில் இந்தியர்களும் விண்வெளிக்கு செல்வார்கள் என முன்னாள் விண்வெளி ஆராய்ச்சியாளர் வி.கே.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

* நீர்வாழ் உயிரினங்களின் நோய்களை கண்டறிய தேசிய அளவிலான கண்காணிப்பு திட்டம்: மத்திய அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்.

* அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்பது ஆளுநரின் கடமை: உச்ச நீதிமன்றம்.

* நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் சூழலில், வெப்ப அலையால் ஏற்படும் நோய்கள் குறித்து கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.

* ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்.

* வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதை தொடர்ந்து, விவசாய உற்பத்தியில் தீவிர மாற்றத்திற்கு அந்நாட்டு அதிபர் கிம் அழைப்பு விடுத்துள்ளார்.

* சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 378 வாரங்கள் முதலிடம் வகித்து ஸ்டெபி கிராஃபின் சாதனையை முறியடித்துள்ளார்.

* சிறந்த ஃபிஃபா வீரர் விருது வென்றார் லயோனல் மெஸ்ஸி.


Today's Headlines

* 1.50 crore people have not linked Aadhaar;  No more time will be given: Minister Senthil Balaji.

*  Former space researcher VK Hariharan has said that Indians will also go to space in 5 years.

 * National Surveillance Program for Aquatic Diseases: Union Ministers Launch

 * Duty of Governor to accept recommendation of Cabinet: Supreme Court.

 * In the context of increasing heat wave across the country, the Central Health Department has written to the state governments to monitor the diseases caused by heat wave.

 * Chinese Foreign Minister arrives in India to participate in G20 summit.

*  Following North Korea's food shortages, President Kim has called for a drastic change in agricultural production.

 * Serbia's Novak Djokovic has topped Steffi Graf's record for 378 weeks at the top of the international tennis rankings.

*  Lionel Messi won the best FIFA player award.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive