தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளதால் மார்ச் 3 ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்குநர் சா.சேதுராமன் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் இணை இயக்குநர் எழுதியுள்ள கடிதத்தில், “ மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.dge.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துக்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை சரியான முறையில் விநியோகம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...