பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் (தையல், ஓவியம், உடற்கல்வி, கணினி) பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் 3 நாட்கள் (தினம் அரைநாள்) பணியாற்றும் அவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம்தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். சென்னையில் கல்வித் துறைஅலுவலகங்கள் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தில் தனியாகவும், குடும்பத்தினரோடும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேர்தல் அறிக்கையில் உறுதி: இந்நிலையில், தமிழ்நாடு பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் கீதா தலைமையில் 300-க்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்புஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தவாறு, பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...