Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாண்புமிகு பிரதமரிடமிருந்து வந்துள்ள வாழ்த்துச்செய்தி


 




வணக்கம் ஐயா, என் பெயர் இரா.மோகன்ராஜ், நான், விழுப்புரம் மாவட்டம், தையூர், அரசு மேனிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணி ஆற்றுகிறேன். எனக்கு கடந்த 12.10.2023 அன்று, மாண்புமிகு பிரதமர் அவர்களிடமிருந்து நான் பணி புரியும் பள்ளிக்கு ஒரு கடிதம் வந்தது அதன் விபரம்.

கடந்த 2022- 2023ஆம் கல்வியாண்டின் இறுதியில் நடைபெற்ற பரிக்சா பே சர்ச்சா 2023 (அதாவது, தேர்வின் மீது விவாதம் 2023) என்ற நிகழ்ச்சிக்காக Enable Learning Environment (அதாவது, கற்றல் சூழலை செயல்படுத்துதல்) என்ற தலைப்பின் கீழாக, விழுப்புரம் மாவட்டம், தையூர், அரசு மேனிலைப் நிலைப்பள்ளியில், மாணவர்களின் கற்றல் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்ட செயல்திட்ட நிகழ்வுகள் தொடர்பான கட்டுரையை எழுதி சமர்ப்பித்தமைக்காக, மாண்புமிகு  பிரதமர் 
திரு. நரேந்திர மோடி அவர்களிடமிருந்து அஞ்சல் மூலமாக வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. மாண்புமிகு பிரதமர் அனுப்பியுள்ள அந்த வாழ்த்துச்செய்தியில், 

திரு மோகன்ராஜ் அவர்களே உங்களுக்கு என் அன்பான நல் ஆசிகள். 

பரிக்சா பே சர்ச்சா நிகழ்ச்சியில் பங்கேற்று உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. 

உங்களைப் போன்ற இளம் குடிமக்களின் எண்ணங்களை தெரிந்து கொள்வதும் புரிந்து கொள்வதும் எப்போதும் ஊக்கமளிக்கிறது.

இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆற்றல், தன்னம்பிக்கை மற்றும் திறன்களை பார்க்கும் பொழுது எனக்கு மிகுந்த பெருமிதம் ஏற்படுகிறது.

மேலும், அவர் தமது வாழ்த்து செய்தியில், இந்தியாவின் இளைய சக்தி அவர்களின் தனிப்பட்ட இலக்குகளை நாட்டின் முன்னேற்றத்துடன் இணைப்பதன் மூலம் தேசத்தை உயர் சிகரங்களுக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் நம்புகிறேன். 

வாழ்க்கையின் ஒவ்வொரு சோதனையிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்துகிறேன் என்று மாண்புமிகு பிரதமர் அந்த வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive