எனவே , அனைத்து அரசு / அரசு உதவி பெறும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதி மற்றும் அருகாமை குடியிருப்பு பகுதிகளில் உள்ள 5 வயது நிரம்பிய மற்றும் பள்ளி வயது பிள்ளைகளை அரசின் நலத்திட்டங்களை எடுத்து கூறி உடனடியாக அரசு பள்ளிகளில் சேர்க்கை செய்வதற்கு ( Spot admission ) மேற்கொள்ளவேண்டும் . இப்பணியை பள்ளி வேலை நேரத்தில் மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் அறிவுறுத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் , இந்த முக்கியமான பணியை கருத்தில் கொண்டு , மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தி அதனை உடனுக்குடன் இவ்வியக்கத்தில் மூலம் அனுப்பப்பட்டுள்ள Google Form- ல் தினந்தோறும் பூர்த்தி செய்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...