என்ஜினீயரிங் படிப்புக்கான துணை
கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 1,86,475 இடங்களில்,
இரண்டு சுற்று கலந்தாய்வுகள் முடிவில் 92,423 இடங்கள் நிரம்பின. மூன்றாம்
சுற்று கலந்தாய்வில், 1,29,516 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, 64,629
பேருக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
அவர்களில் 51,429 பேர் இடங்களை உறுதி செய்துள்ளனர். மூன்றாம் சுற்று கலந்தாய்வு வரும் 20-ஆம் தேதி முடிவடைய உள்ளது. தற்போதுவரை 1,43,852 இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், மீதமுள்ள இடங்களுக்கான துணை கலந்தாய்வு 21-ஆம் தேதி தொடங்கும். சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...