Agaram அறக்கட்டளையில் Scholarship பெற விண்ணப்பிப்பது எப்படி?
கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. பிரபலமான இந்த நடிகரின் சினிமா பிரபலத்துக்காக அல்ல; இவர் சமூகத்திற்குச் செய்யும் தன்னிகரில்லா சேவை தான் காரணம்.
இவரது தொண்டு நிறுவனமான அகரம் அறக்கட்டளை இதுவரை சுமார் 7000 மாணவர்கள் படிக்க வைத்துள்ளது. இந்த அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.
சூர்யாவின் ‘அகரம் அறக்கட்டளை’யில் கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?
கலை மற்றும் அறிவியல் அல்லது டிப்ளமோ படிக்க, ஒரு மாணவருக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ 2.5 லட்சத்தையும், மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க 4 ஆண்டுகள் முதல் 5.5 ஆண்டுகள் வரை ரூ 4.50 லட்சத்தை அறக்கட்டளை ஏற்கிறது.
அகரம் அறக்கட்டளையில் சேர யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், அவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் ஊரக பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிப்பவர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
நடப்பு கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுபவராக இருத்தல் வேண்டும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கல்லூரியில் சேர அவர் முதல் பட்டதாரி மாணவராக இருக்க வேண்டியது அவசியம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி.
அகரம் ஊக்கத்தொகை பெற தேவையான ஆவணங்கள் :
ஆதார் கார்டு
நிரந்தரமான வீட்டு முகவரி சான்று
ரேஷன் அட்டை
ஜாதி சான்றிதழ்
வங்கிக் கணக்கு
10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பதற்கான சான்றிதழ்
விண்ணப்பிக்கும் முறை :
AGARAM Foundation Application Form
AGARAM Foundation Application Form - PDF Download Here
அகரம் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.agaram.in/ க்கு சென்று அதில் தெரியும் விண்ணப்பத்தில் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்கள், புகைப்படத்தை அப்லோடு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
திட்டத்தில் சேர விரும்பி விண்ணப்பிக்கும் ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண் பட்டியலும் பொருளாதார தேவையும் கருத்தில் கொண்டே தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்கள் விண்ணப்பத்தில் கூறிய தகவல்கள் உண்மை தானா என்பதையும், நிதி நிலைமையையும் சோதனை செய்ய அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் மாணவர்களின் வீட்டுக்கே சென்று ஆராய்ந்து அதன் பின்னரே மாணர்வகள் தேர்வு செய்யப்படுவார்கள்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...