இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புகளுக்கான முதலாமாண்டு மற்றும் 2-ஆம் ஆண்டு தேர்வுகள் மே, ஜூன் மாதங்களில் நடத்தப்பட்டன. அந்தத் தேர்வெழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் புதன்கிழமை பிற்பகலில் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து மாணவர்கள் அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், தனித்தேர்வர்கள் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும், விடைத்தாள் நகல் பெற விரும்புவோர் www.dge.tn. gov.in என்ற தேர்வுத் துறை இணையதளத்தில் அதற்குரிய விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். நிறைவு செய்த விண்ணப்பங்களை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் அக்.17 முதல் 22-ஆம் தேதி வரை நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கு கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.275 செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே பின்னர் மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...