கார்களின் முன்சீட்டில் எப்போதும் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை உட்கார வைக்க கூடாது. இதை கார் உற்பத்தியாளர்களே அந்த manual-களில் எச்சரிக்கையாக சொல்லியிருப்பார்கள்.
கார்கள் விபத்துக்குள்ளானால் காற்று பைகள் (airbags) ஒரு வெடிப்பு போல் தீவிர வேகத்துடன், அதாவது கிட்டத்தட்ட 250-300km/h வேகத்தில் வெளிப்படும்.
இந்த வேகத்தை இளம் வயதினர்களின் தலை மற்றும் நெஞ்சுப்பகுதி தாங்கிக் கொள்ளும். ஆனால், 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் தலை மற்றும் மார்பு தாங்காது. இந்த வேகத்தில் அடிக்கும்போது சிறுவர்களுக்கு பலத்த உள்காயங்களை உண்டாக்கி இப்படி மரணத்தை ஏற்படுத்தி விடும்.
பொதுவாக, காற்றுப் பைகள் டேஸ்போர்ட்டுக்குள் பல மடிப்புகளாக மடித்து வைக்கப்பட்டிருக்கும். இதன் ஒரு முனையில் சிறிய அளவிலான வெடியை உண்டாக்கும் வேதிக்கலவைகள் வைக்கப்பட்டிருக்கும்.

கார் விபத்துக்குள்ளானதும் சென்ஸார்கள் மூலம் கண நேரத்தில் இங்கே வெடிப்பு ஏற்பட்டு அந்த வேதிக்கலவைகள் எல்லாம் நைட்ரஜன் வாயுவாக மி.வினாடி நேரத்தில் மடிப்புகளுக்குள் நிரம்பி வெடித்து பெரிய பலூனாக வெளியே தள்ளப்படும்.
நன்கு வளர்ந்த நபர் இந்த வேகத்தை தாங்கிக்கொள்வார். சில வினாடிகளில் அந்த காற்றுப் பையில் உள்ள நுண்ணிய துளைகள் வழியாக வாயு வெளியேறும்போது காற்றுப்பை சிறிது ரிலாக்ஸ் ஆகும். இதனால், முன்னிருக்கையில் உள்ள நபர்களால் சுவாசிக்க முடியும்.

சுமார் 300km/h வேகத்தில் வெளிப்படும் காற்றுப்பையை இந்த 7 வயது சிறுவனின் தலை மற்றும் மார்பு எப்படி தாங்கும்...?
முன் இருக்கையில் குழந்தைகளை அமர வைக்கும்போது காற்றுப்பைகள் செயல்படாதவாறு மேனுவலாக செயலிழக்க செய்யலாம். ஆனால், சாதாரண விபத்துக்களில் மட்டுமே இது பாதுகாப்பாக இருக்கும். மோசமான விபத்துகளில் எது வேண்டுமானாலும் நிகழலாம்.

எனவே,
இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களை முன்
சீட்டில் அமர வைப்பதை தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற விபத்துக்கள் மிக அரிது
என்றாலும், எச்சரிக்கையாக இருப்பது நல்லது தானே!!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...