Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கருணை அடிப்படையிலான பணி நியமனம் - விதிகளில் திருத்தங்கள் : அரசாணை வெளியீடு

 
பணியின் பொழுது உயிரிழக்கும் ஊழியர் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம்  தொடர்பாக தமிழ்நாடு அரசு புதிய மாற்றம்

தமிழ்நாட்டில் பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் கருணை அடிப்படையிலான பணி நியமனம் (Compassionate Appointment) தொடர்பான விதிகளில், மாநில அரசு ஒரு முக்கிய மற்றும் மனிதாபிமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

கருணை என்பது ஒரு கடமை, பிச்சை அல்ல" என்ற உயர் நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று, இந்த விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள், வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் வேலைவாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

புதிய மாற்றங்கள் என்ன?

மனிதவள மேலாண்மை துறையால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணிகள் (கருணை அடிப்படையில் நியமனம்) விதிகள், 2023-இல் பல முக்கியத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

திருமணமான மகள் மற்றும் மருமகனுக்கும் வாய்ப்பு: இதுவே இந்த திருத்தத்தின் மிக முக்கியமான அம்சமாகும். இதுவரை, திருமணமான மகள்கள் கருணை அடிப்படையில் வேலை பெற தகுதியற்றவர்களாக இருந்தனர். இனி, உயிரிழந்த அரசு ஊழியரின் திருமணமான மகளும், தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன், பெற்றோரை சார்ந்தே வாழ்ந்து வந்தார் என்பதை நிரூபித்தால், அவரும் கருணை அடிப்படையில் வேலை கோரலாம். ஒருவேளை, திருமணமான மகள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தால், அவரது கணவர் (அரசு ஊழியரின் மருமகன்) கூட வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இது ஒரு புரட்சிகரமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

வறுமையான சூழல்: முன்பு, இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு சொந்தமாக வீடு இருந்தாலோ அல்லது கணிசமான ஓய்வூதியம் கிடைத்தாலோ, அவர்கள் வறுமையில் இல்லை என கருதி வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. புதிய விதிகளின்படி, ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அவர்கள் வறுமையான சூழலில் உள்ளதாகக் கருதப்படுவார்கள். இது, தகுதியான பல குடும்பங்கள் பயன்பெற வழிவகுக்கும்.

உறவினர்களின் பட்டியல்: புதிய விதிகளின்படி, இறந்த அரசு ஊழியரை சார்ந்த உறவினர்களின் தகுதி பட்டியல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சட்டப்பூர்வமாகத் திருமணம் ஆன மனைவி அல்லது கணவர், மகன் அல்லது மகள், திருமணமாகாத, விவாகரத்தான அல்லது கணவரை இழந்த ஊழியர்களின் பெற்றோர், திருமணமாகாத ஊழியரின் சகோதரன் அல்லது சகோதரி.

விண்ணப்பத்திற்கான கால அவகாசம்: கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஊழியர் இறந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும் என்பது தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்புகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இறந்தவரின் மனைவி/கணவர் அல்லது பெற்றோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். மகன், மகள், சகோதரன் அல்லது சகோதரி 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மாற்றத்திற்கான காரணம்

கருணை அடிப்படையிலான பணி நியமனம் என்பது வெறும் சலுகை அல்ல, அது அரசின் கடமை என்பதை சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியுள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்கும் குடும்பங்கள், அதிகாரிகளால் தேவையற்ற அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப்படுவதாகவும், விதிகள் கடுமையாக பின்பற்றப்படுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இந்த வழிகாட்டுதல்களை தொடர்ந்து, அரசு இந்த மனிதாபிமான மாற்றங்களை செய்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்த புதிய விதிகள், உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஒரு உண்மையான நிதிப் பாதுகாப்பை வழங்கி, அவர்களின் துயரத்தில் பங்கெடுக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.

கருணை அடிப்படையிலான பணி நியமனம் - தமிழ்நாடு குடிமைப் பணி விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசாணை வெளியீடு

👇👇👇 

PDF Download Here






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive