மறுநியமன
அடிப்படையில் பணிபுரியும் CPS ஆசிரியர்களுக்கு மறுநியமன காலத்தில்
கடைசியாகப் பெற்ற முழு ஊதியம் வழங்க வேண்டும் - CPS (Employee Contribution
& Employer Contribution) பிடித்தம் செய்யத் தேவையில்லை - நிதித்துறை
முதன்மைச் செயலாளர் உத்தரவு!
கடந்த காலத்தில் கூடுதலாக தொகை பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அதையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
CPS திட்டத்தில் மறு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு மறு நியமன பணி காலத்தில் 20% ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு 80 சதவீத ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது
இதை கருவூல கணக்குத் துறைக்கும், நிதி துறையில் கவனத்திற்கும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தொடர்ந்து கொண்டு சென்றதன் அடிப்படையில் கருவூலக்கணக்குத்துறை ஆணையர் நிதித்துறையில் இது தொடர்பாக விளக்கம் கோரி இருந்தார்.
கடந்த வாரம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில், நிதித்துறை செயலாளரை சந்தித்து உரிய அரசாணைகள் விளக்கங்கள் மீண்டும் வழங்கப்பட்டதன் அடிப்படையில், தற்போது மறுபணி நியமன காலத்தில் அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியம் முழுவதையும் பெற்று வழங்கலாம் என்று நிதித்துறை சார்பில் தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆசிரியர் நலன் காக்கும் உன்னத இயக்கமாய் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பயணம் தொடரும்.
Treasuries and Accounts Department - PDF Download Here
Cps Teachers Clarifications - PDF Download Here
Cps Clarification Order - Download here







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...