Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் அடுத்த ஆண்டு கனடாவுக்கு கல்விச் சுற்றுலா: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

hindutamil-prod%2F2026-02-10%2F1ts3c0bz%2F23 
அரசுப் பள்ளி மாணவர்கள் அடுத்த ஆண்டு கனடாவுக்கு கல்​விச் சுற்​றுலா அழைத்​துச் செல்​லப்​படு​வார்​கள் என்று அமைச்​சர் அன்​பில் மகேஸ் தெரி​வித்​தார்.
 
இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் பள்​ளிக் கல்​வித் துறை அமைச்சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி நேற்று கூறிய​தாவது: தற்​போது சட்டப்​பேர​வைத் தேர்​தல் காலம் என்​ப​தால் பல்​வேறு பணி​கள் இருக்​கின்​றன.

பள்​ளிக்​கல்​வித் துறை​யில் பாடத்​திட்ட மாற்​றப் பணி​கள் இருப்​ப​தா​லும், இந்த முறை என்​னால் மாணவர்​களு​டன் கல்​விச் சுற்​றுலா​வுக்கு வெளிநாடு செல்ல முடிய​வில்​லை.

அதனால் 40 பள்ளி மாணவர்​களு​டன் சேர்ந்து 4 ஆசிரியர்​கள், அதி​காரிகள் மலேசி​யா​வுக்கு செல்​கின்​றனர். ஏற்​கெனவே இங்​கிருந்து சென்று மலேசி​யா​வில் தங்கி படித்து வரும் 17 மாணவர்​களை​ சந்திப்பார்கள்.

அங்​குள்ள நூல​கத்​தை​யும், பல்​கலைக்​கழகத்​தை​யும் பார்வையிட்டு, மலேசி​யா​வின் பண்​பாட்டு தொடர்​பான விஷ​யங்​களை​யும் தெரிந்து கொள்வார்கள். மேலும், தொழில் நிறு​வனத்தை நடத்​துபவர், தொழில் முனை​வோரை சந்​தித்​தல் போன்​றவற்​றில் பங்​கேற்க உள்​ளனர். எல்லா மாணவர்​களுக்​குள்​ளும் ஒரு தனித் திறன் இருக்​கும்.

அவர்​களை மேலே கொண்டு வரும் வகையி​லான கல்​விச் சுற்​றுலா​வாக இது இருக்​கும். அதே​போல், கனடா​வில் இருந்து இங்கு வந்​துள்ள பார்​வை​யாளர்​கள், தமிழக மாணவர்​களை அந்த நாட்​டுக்கு அனுப்பி வைக்க வேண்​டுமென கோரிக்கை வைத்​துள்​ளனர். அதன்​படி, அடுத்த ஆண்​டில் தமிழக பள்ளி மாணவர்கள் கனடா செல்​வார்​கள்.

செய்முறைத் தேர்வு: செய்​முறைத் தேர்​வு​கள் தற்​போது தொடங்​கியுள்ளன. மாணவர்கள் பதற்​றமின்றி உற்​சாக​மாக தேர்​வு​களை எழுதி வரு​கின்​றனர். உறு​தி​யளிப்பு ஓய்வூதிய திட்​டத்தை பலர் விமர்​சனம் செய்​கின்​றனர். அந்த கோரிக்கை நிறைவேற்ற முடி​யாது என்ற நிலை​யில் நாங்​கள் அதை செய்து காட்​டி​யுள்​ளோம். அதை தாங்​கிக் கொள்ள முடி​யாதவர்​கள் தான் விமர்​சிக்​கின்​றனர்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive