Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சத்துணவு - தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை பாய்ந்தது

  பெரும்பாலை அருகே பழையூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள கெண்டையனஅள்ளி புதூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 85. மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் அண்மையில் வழங்கப்பட்ட சத்துணவால் மாணவர்கள் சிலருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு பெரும்பாலை துணை சுகாதார நிலையத்தில். அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பெற்றோர் தெரிவித்த புகாரின் அடிப்படையில், அண்மையில் ஆட்சியர் வே.சரவணன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட கல்வித் துறை அதிகாரி கள் பள்ளிகள்தோறும் சென்ற ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது
 
அதன் அடிப்படையில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தென்றல், பழையூர் கெண்டையனஅள்ளி புதூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுக்கு சுகாதாரமற்ற முறையில் உணவு விநியோகித்த சத்துணவு அமைப்பாளர் முல்லை, சமையலர் ராதா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தார். மேலும் தரமற்ற உணவு விநியோகித்தது குறித்து தகவல் தெரிவிக்காத பள்ளி தலைமை ஆசிரியர் ஓய்வுபெற்ற ரேணுகாவுக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு உத்தரவை ரத்துசெய்தார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு சென்று நலம் விசாரித்தார். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive