Public Exam 2026
வாழ்வில் சாதிக்கும் துடிப்பு இருக்கும் நபர்களுக்கு என்றுமே போரடிப்பதில்லை
இன்றைய இளைஞர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு
வார்த்தை "போரடிக்கிறது" என்பதாக இருக்கிறது. எதுவும் அவர்களுக்கு
சீக்கிரமே போரடித்துப் போகிறது. ஆரம்பத்தில் சுவாரசியமாக இருப்பதாக அவர்கள்
நினைக்கும் விஷயங்கள்கூடக் காலப்போக்கில் போரடிக்கும் விஷயங்களாக மாறி
விடுகிறது. சொல்லப் போனால் பழையவை எல்லாம் போரடித்துப் போகும்
சமாச்சாரங்களாக மாறி விடுகிறது.
TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(09.07.14) மேலும் பல அவமதிப்பு வழக்குகள்
TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக
வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை
மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில்ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும்,
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை.
TNTET- ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு - தினத்தந்தி செய்தி
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது.
மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் விடுப்பில் கைவைப்பு
பள்ளி வேலை நாட்களில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு "ஆன் டியூட்டி" இன்றி தற்செயல் விடுப்பு நாளாக கணக்கிடப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
TNTET Relaxation regarding Supreme Court Order
TNTET - 2013 ல் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகல்.
TRB PG TAMIL வழக்குகள் இன்று (09.07.14) விசாரணை
TRB PG TAMIL: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் இன்று (09.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை
TRB,PG, TET மதுரையில் நீதியரசர் கே.கே சசிதரன் விசாரிப்பார்
07.07.2014 திங்கள் முதல் TRB,PG, TET,மற்றும் service தொடர்பான வழக்குகள் ,புதிய வழக்குகளை, மதுரையில் நீதியரசர் கே.கே சசிதரன் அவர்கள் விசாரிப்பார்கள்
2014-15 CRC / BRC Tentative Training List
அகஇ - 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் நடத்தவுள்ள தொடக்க / உயர்நிலை ஆசிரியர்களுக்கான தற்காலிக பயிற்சி அட்டவணை
02.11.2007க்கு முன்னர் அனுமதி இன்றி எம்.பில் - விவரம் கோரி இயக்குனர் உத்தரவு
02.11.2007க்கு முன்னர் அனுமதி இன்றி எம்.பில் படிப்பில் சேர்ந்து 02.11.2007க்கு பின்னர் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்குபுதிய சிக்கலா???
பள்ளிகளில் யோகா : சுப்ரீம் கோர்ட்டில் மனு
பள்ளிகளில், யோகா கற்பிப்பதை கட்டாயமாக்க
வேண்டும் எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் சேத் என்பவரும்,
பத்மபூஷன் விருது பெற்ற, டாண்டன் என்பவரும், பள்ளிகளில், யோகா போதிப்பதை
கட்டாயமாக்கும்படி உத்தரவிட வேண்டும் எனக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில்
மனுத்தாக்கல் செய்தனர்.
இரண்டாண்டு படிப்பாகிறது பி.எட்.,ஓராண்டு படிப்பு முடிவதால் மவுசு
கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.,) அடுத்த ஆண்டு முதல், இரண்டாண்டு
படிப்பாக மாற்றப்படுவது உறுதியாகி உள்ளதால், நடப்பாண்டு, பி.எட்.,
படிப்பிற்கு கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர்
படிப்புகளில் ஒன்றான, பி.எட்., பட்டப்படிப்பு, ஓராண்டு படிப்பாக இருந்து
வருகிறது. மத்திய அரசால், பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் திறன்,
கல்வியால் பெற்ற அவர்களின் அறிவுத்திறன் ஆகியவை, நுண்ணிய ஆய்விற்கு
எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், தமிழக மாணவர்களின் அறிவுத்திறன் மிக
குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.எனவே, கல்வி கற்பித்துத் தரும்
ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதற்காக, பி.எட்., படிப்பை, அடுத்த ஆண்டு
முதல், இரண்டு ஆண்டு படிப்பாக மாற்ற திட்டமிடப்பட்டது.
இந்த பலி போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?
இந்த பலி போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 10 வருடங்களுக்கு முன்பு வரை 450 மதிப்பெண் பெறுவது சாதனையாக இருந்தது. ஆனால் தற்போதோ 490 மதிப்பெண் பெறுவது கூட பெரிய சாதனையாக மதிக்கப்படுவது இல்லை.
சமீப காலங்களில் பல மாவட்டங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதற்கே சிரமப்பட்ட மாணவர்கள் அல்ல. 480 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்ற மாணவர்கள் என்பது தான் இதில் ஆச்சரியம். பிறகு ஏன் தற்கொலை முயற்சி? மாநில அளவில் முதல் இடம் பிடிக்க வில்லை எனும் வருத்தமும், பிரபல பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் நடத்தப்படும் கல்வி முறைக்கு பொருந்திப் போவதில் உள்ள சிக்கலும் தான் இவர்களை தற்கொலை முயற்சியில் ஈடுபட வைத்துள்ளது.
மாணவர்களின் இந்த மனப்போக்கை மாற்ற நாம் முன் வைக்கும் சில யோசனைகள் -
- உடனடியாக 10 ஆம் வகுப்பில் மதிப்பெண் முறைக்கு பதிலாக CCE கிரேடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- மனப்பாடம் செய்து தேர்வில் கக்கும் முறையை ஒழித்து மாணவர்களின் புரிதல் திறனை சோதிக்கும் வகையில் வினாத்தாள் மதிப்பீடு இருக்க வேண்டும்.
- பள்ளிகளில் முன்னதாகவே நடைமுறையில் இருக்கும் ”புத்தக பூங்கொத்து” திட்டத்தினை வலுவூட்டி அவற்றில் இருந்து கேள்விகள் பொதுத் தேர்வில் கேட்கப்பட வேண்டும். உதாரணமாக 6 ஆம் வகுப்பு மாணவர்களின் தமிழ் புத்தகத்திலேயே ”Reference Books” என்ற தலைப்பில் பல புத்தகங்களின் பெயரை அச்சடித்து தர வேண்டும். குறிப்பிட்ட அத்தகைய புத்தகங்களை புத்தக பூங்கொத்து திட்டத்திற்காக மாணவர்கள் பார்வையிட ஏதுவாக உடனுக்குடன் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். இதே போல் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உட்பட அனைத்து பாடங்களிலும் முப்பருவத்திலும் பயில வேண்டிய நூலக புத்தங்களின் பட்டியலை வழங்கி மாணவர்கள் குறிப்பிட்ட புத்தகங்களை பள்ளி நூலகத்திலிருந்து தேடிப்படிக்க வாய்ப்பு வழங்க வேண்டும். இம் முறை முன்னதாகவே நடைமுறையில் இருந்தாலும் பெரிதாக வெற்றி பெற ஒவ்வொரு தேர்விலும் 25 மதிப்பெண்கள் இத்தகைய Referece நூல்களில் இருந்து கேட்கப்பட்டால் மட்டுமே மாணவர்களிடம் நூலக வாசிப்பு மற்றும் புரிந்து படித்தல், நல்ல கருத்துகளை தேடிப்படித்தல் ஆகிய குணங்கள் வளரும். படிப்படியாக இம்முறை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். (முன்னதாகவே இம்முறை சி.பி.எஸ.இ திட்டத்தில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது)
எங்கள் மாணவர்கள் அதிக படியான மன நெருக்குதலுக்கு உட்பட்டு புத்தி பேதலிக்கும் நிலைக்கு முந்தைய நிலையில் உள்ளனர். அதனால் தான் அவர்கள் வருடம் தோறும் விட்டில் பூச்சிகளாய் இறந்து வருகின்றனர். மவுலிவாக்கம் கட்டிட விபத்து போன்று 60 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானாலோ அல்லது 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து போன்ற அசாதாரண எண்ணிக்கைக்கு மட்டும் அரசு உடனடியாக தீர்வு காணாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்று வரும் எம் மாணவர்களின் தற்கொலை முயற்சியையும், உயிர் பலியையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இன்றைய கல்வி முறை மற்றும் மதிப்பீடு முறையில் உடனடியாக மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள நமது கருத்துக்கள் குறித்து கல்வியாளர்களுடன் விவாதித்து நல்லமுறையில், விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கட்டுரை ஆக்கம் -
திரு. K. மோகன், பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைபள்ளி, அச்சமங்கலம், வேலூர் மாவட்டம்.
அரசுப் பள்ளி வேலை நாள் பட்டியல் வெளியீடு மொத்த கற்றல் கற்பித்தல் நாள் 186 ஆக உயர்வு!
கடந்த கல்வி ஆண்டை காட்டிலும், நடப்பு கல்வி ஆண்டில், மொத்த வேலை நாட்களை அடிப்படையாக கொண்டு, மொத்த கற்றல், கற்பித்தல் நாள், உயர்நிலை
மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, 183 இருந்து, 186 நாட்களாக நிர்ணயம்
செய்து, பள்ளி நாட்காட்டியை அரசு வெளியிட்டுள்ளது.
BRT மாறுதல் சார்பாக தள்ளுபடியான வழக்கு மீண்டும் மேல்முறையீடு
வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மாறுதல் சார்பாக தள்ளுபடியான வழக்கு மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டு நாளை விசாரணக்கு வருகிறது
பாலியல் கல்வி வேண்டுமா, வேண்டாமா?
பள்ளிகளில் பாலியல் கல்வி தொடர்பாக விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இரண்டு அனுமானங்களின் அடிப்படையில் இந்த விவாதங்கள் நடக்கின்றன: 1. ஏற்கெனவே பள்ளிகளில் பாலியல் கல்வி போதிக்கப்பட்டுவருகிறது - இது தடைசெய்யப்பட வேண்டும் அல்லது தொடரப்பட வேண்டும். 2. பாலியல் கல்வி இருக்கிறதா, இல்லையா என்பது தெரியாது - ஆனால், அது தேவை (அல்லது) தேவையில்லை என்ற விவாதம்.
சட்டசபை கூட்டத்தொடர்- 17 ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறை மானிய விவாதங்கள்
ஜூலை 10 முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்- 17 ஆம் தேதி உயர்கல்வி, பள்ளிக்கல்வித் துறை மானியம் தொடர்பான விவாதங்கள் நடைபெற உள்ளன.
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர: ரம்யா சரஸ்வதி
கல்வி என்றால் என்ன???? ஒருவரின் ஆளுமைத்திறனை
வெளிக்கொணர கடவுள் மனிதனுக்கு தந்த வரம் ஆகும்….அதை நாம் பள்ளி என்னும்
கோவிலில் மட்டுமே பெறமுடியும்….ஏன் பள்ளியை கோவிலுக்கு
ஒப்பிடுகின்றோம்…காரணம் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்க கூடிய இடம்
பள்ளி மட்டுமே…. பள்ளி ஏடும் எழுத்தும் மட்டும் அறியும் இடமில்லை நாம்
யாரென்று நம்மை அடையாளம் காட்டும் ஒரு கோவில்.... மனிதனை மகானாக்குவதும்
இந்த பள்ளிக்கூடமே... ஆனால் தற்பொழுது அந்த கோவில் பல பிரிவினைக்கு
(அரசினர் பள்ளி மற்றும் தனியார் பள்ளி என )ஆளாகி அதன் தனித்துவத்தை இழக்க
ஆரம்பித்துவிட்டன…..அவற்றைப் பற்றிக் காண்போம்…..
ஒடுக்கத்தூர் அருகே பஸ்சை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டம்
ஒடுக்கத்தூர் அடுத்த மேல் அரசம்பட்டில் அரசு
உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 220
மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் 7 ஆசிரியர்கள் இருக்க
வேண்டிய இடத்தில் 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த 3 வாரங்களாக 2
ஆசிரியர்கள் மட்டுமே பாடம் நடத்தினர். இதனால் பருவத்தேர்வுக்கான பாடங்கள்
மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படவில்லை.








