Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொறியியல் படிப்புக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்: ஜூன் 29-ல் தரவரிசைப் பட்டியல்

hindutamil-prod%2F2026-06-06%2Fqsr5gmd7%2F12

பொறியியல் படிப்​பில் சேர 3 லட்​சத்து ஆயிரத்து 509 மாணவர்​கள் ஆன்​லைனில் விண்​ணப்​பித்​துள்​ளனர். தரவரிசைப் பட்​டியல் ஜூன் 29-ம் தேதி வெளி​யிடப்​படு​கிறது.

தமிழகத்​தில் உள்ள பொறி​யில் கல்​லூரி​களில் இந்த ஆண்டு பிஇ, பிடெக் படிப்​பு​களில் அரசு ஒதுக்​கீட்டு இடங்​களில் சேரு​வதற்​கான ஆன்​லைன் விண்​ணப்​பப்பதிவு மே 3-ம் தேதி தொடங்​கியது. முதல் நாளன்றே 8,505 பேர் விண்ணப்​பித்​தனர்.

விண்​ணப்​பிப்​ப​தற்​கான காலக்​கெடு ஜூன் 2-ம் தேதி முடிவடைய இருந்த நிலை​யில், கடைசி தேதி ஜூன் 5 வரை நீட்​டிக்​கப்​பட்​டது. அதன்​படி, பொறி​யியல் படிப்​புக்கு விண்​ணப்​பிப்​ப​தற்​கான அவகாசம் நேற்​றுடன் முடிவடைந்​தது.

நேற்று மாலை 6 மணி நில​வரப்​படி, 3 லட்​சத்து ஆயிரத்து 519 பேர் ஆன்​லைனில் விண்​ணப்​பித்​திருப்ப தாக​வும் அவர்​களில் 2 லட்​சத்து 43 ஆயிரத்து 476 பேர் விண்​ணப்ப கட்​ட​ணத்தை செலுத்​தி​யுள்​ள​தாக​வும், 2 லட்​சத்து 23 ஆயிரத்து 599 பேர் தேவை​யான சான்​றிதழ்​களை பதிவேற்​றம் செய்​துள்​ள​தாக​வும் தமிழ்​நாடு பொறி​யியல் மாணவர் சேர்க்கை செய​லா​ளர் புருஷோத்​தமன் தெரி​வித்​துள்​ளார்.ஆன்​லைனில் விண்​ணப்​பித்த மாணவர்​கள், சான்​றிதழ்​கள் பதிவேற்​றம் செய்ய இன்று (சனிக்​கிழமை) வரை அவகாசம் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டபடி, பொறி​யியல் படிப்​புக்கு விண்​ணப்​பித்த மாணவர்​களின் தரவரிசைப் பட்​டியல் ஜூன் 29-ம் தேதி வெளி​யிடப்பட உள்​ளது. விரும்​பும் கல்​லூரி மற்​றும் பாடப்​பிரிவை தேர்வு செய்​வதற்​கான கலந்​தாய்வு தொடங்​கும் தேதி அன்​றைய தினம்​ அறிவிக்​கப்​படு​கிறது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive