அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது.
தமிழகத்தில் 180 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஏ, பிஎஸ்சி, பிபிஏ, பிபிஎம், பிகாம், பிசிஏ உள்ளிட்ட இளங் கலை பட்டப்படிப்புகளில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 959 இடங்கள் உள்ளன.
இதில் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு அந்தந்த கல்லூரிகளில் ஜூன் 5, 6-ம் தேதிகளில்நடந்தது. இந்நிலையில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது.
இதில் பங்கேற்று பிடித்தமான பாடப்பிரிவை தேர்வு செய்த மாணவர்களுக்கு உடனடியாக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. பொதுப் பிரி வினருக்கான கலந்தாய்வு ஜூன் 18 வரை நடைபெறுகிறது.
இதற்கிடையே அரசு கல்லூரிகளில் நிர்ணயிக்கப் பட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் ஜூன் 1 முதல் மீண்டும் விண்ணப்பிக்க கல்லூரி கல்வி ஆணையரகம் கால அவகாசம் வழங்கியது.
அதன்படி மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு மூலம் பாடப் பிரிவு ஒதுக்கப்படும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...