ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான தகுதிச் சான்று பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று, பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (செப்.24)
நடைபெற்ற ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.







