Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

அலுவலக பணிகளில் ஆசிரியரை ஈடுப்படுத்தக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

      இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் அவர்கள் விடுத்த பேட்டியில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள வழக்கு எண். W.P.NO.28785/2012
 
      உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் (ஆசிரியர்களை) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்களை பல்வேறு பணிகள் செய்ய பயன்படுத்துகிறார்கள். அதில் சம்பள பட்டியல் தயாரிக்கும் பணிகளில்  (ECS) ஈடுப்படுத்துவதால் ஆசிரியர் கற்பித்தல் பணி பாதித்து மாணவர்கள் தேர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் இதே நிலை உள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டை வட்டாரத்தில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்பட்டது.

         இதற்கு சென்னை உயர் நீதிமன்ரத்தின் நீதியரசர் திருமதி. உஷா பரந்தாமன் வழங்கிய தீர்ப்பில் ஆசிரியர்களை பல்வேறுபட்ட பணிகளுக்கு ஈடுப்படுத்தக்கூடாது "குறிப்பாக சம்பளம் பட்டியல் தயாரிக்கும் பணியில் (ECS) ஈடுபடுத்திடகூடாது, என்றும் அப்படி ஈடுபடுத்தினால் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது பாதிப்படையும் என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.




2 Comments:

  1. நல்ல விஷயம் . பாராட்டுக்கள் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்களே

    ReplyDelete
  2. நல்ல முடிவுதான். ஆனால் பல அலுவலகங்களில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. இதனால் ஆசிரியர்களின் மாதந்திர ஊதியம் பெறுவது கூட சில இலடங்களில் இடையூறு இருக்கின்றது. இதனை நீக்க போதிய ஊழியர்களை நியமிக்கவேண்டும். மேலும் சில ஒன்றியங்களில் இலவச பாடப்புத்தகம், சீருடை, பாடக்குறிப்பேடுகள், புத்தப்பை, வண்ணபென்சில்கள் போன்றவ்ற்றை வழங்குவத்ற்குகூட ஆசிரியர்களைத்டான் உ.தொ.க.அலுவல்ர்கள் பயண்படுத்துகிறார்கள். இதனை யார் முறைப்படுத்துவது?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive