Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

மத்திய அரசு ஊழியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறை அமல்

          ''மத்திய ஊழியர்களுக்கு, இந்த மாத இறுதிக்குள், 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறை, முழு அளவில் அமலாகும்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் ராம் சேவக் சர்மா கூறினார்.
          டில்லியில் நேற்று அவர் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களுக்கானஆதார் அடிப்படையிலான, பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையானது, இந்த மாத இறுதிக்குள் முழு அளவில் செயல்பாட்டிற்கு வரும். அதனால், இனி, தங்களின் வருகைப் பதிவு விபரங்களை, attendence.gov.in என்ற இணையதளம் மூலமாக, மத்திய அரசு ஊழியர்கள் பார்க்கலாம்.
 
             மையப்படுத்தப்பட்ட மேலாண்மை முறை மூலம், இந்த வருகைப்பதிவு கையாளப்படும். மத்திய அரசு ஊழியர்கள், தங்களின் அலுவலகங்களில் உள்ள, பயோமெட்ரிக் கருவியில், தங்களின் விரல் ரேகையை பதிவு செய்து, தங்களின் அலுவலக வருகையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.இதன்மூலம், ஊழியர்கள் சரியான நேரத்திற்கும், ஒழுங்காகவும் பணிக்கு வருகின்றனரா என்பதை அறிந்து கொள்ளலாம்.தற்போது, பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில், 1,816 பயோ மெட்ரிக் கருவிகள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றின் மூலம், 43 ஆயிரம் பேர், தங்களின் வருகையை பதிவு செய்கின்றனர்.இவ்வாறு, ராம்சேவக் வர்மா கூறினார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive