மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டியில், கோவை மாவட்டத்திலுள்ள மூலத்துறை அரசுப் பள்ளி மாணவன் முதலிடம்

             ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய "திசையெல்லாம் திருக்குறள்" என்ற மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள   மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் செ.லோகேஸ்வரன் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளான்.

              இச்சாதனைக்காக அவனுக்கு  ரூபாய் பத்தாயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. சென்னையில் சத்யா ஸ்டுடியோ வளாகத்தில் 27 செப்டம்பர் 2014 அன்று நடைபெற்ற இப்போட்டியில் மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்களில் கலந்து கொண்ட  சுமார் 850 மாணவர்களில் இருந்து  தேர்வான  10 மாணவர்கள்  கலந்து கொண்டனர். 
    
           
                 பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவனை பள்ளியின் தலைமையாசிரியை பத்திரம்மாள் மற்றும் ஆசிரியர்கள் திருமுருகன்,முனியம்மாள்,ரவிக்குமார்,அமுதா,அங்கையற்கண்ணி,
பிரேமாள் மற்றும் பள்ளி வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள்   வாழ்த்தினர்.

             புகைப்படத்தில்..ஸ்ரீராம் சிட்ஸ் மண்டல மேலாளர் பாலாஜி அவர்களிடமிருந்து பரிசு  பெறும் மாணவன் செ.லோகேஸ்வரன்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive