Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

உத்தேச மின் கட்டண உயர்வு விவரம் (யுனிட் ஒன்றுக்கு இரண்டு மாத பயன்பாட்டுக்கான கட்டணம்):

     தாழ்வழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் வீடுகள், கோயில்கள், குறு நிறுவனங்களுக்கான கட்டண உயர்வு விவரம்:

வீடுகளுக்கு யூனிட் உத்தேச உயர்வுக் கட்டணம் (தற்போதையக் கட்டணம்): 0-100 வரையில் ஒரு யூனிட்டுக்கு ரூ. 3 (ரூ.2.60); 0-200 ரூ. 3.25 (ரூ. 2.80); , 201-500 யூனிட்டுகளில் 0 முதல் 200 வரை தனியாகவும், 201 முதல்500 வரை தனியாகவும் கணக்கிட்டு வசூலிக்கப்படும். 0-200 ரூ. 3.50 (ரூ.3); 201-500 ரூ. 4.60 (ரூ. 4); , 501 யூனிட்டுக்கு மேல் 0-200, 201-500, 501-க்கு மேல் என்ற அடிப்படையில் தனித்தனியாக கணக்கிடப்படும். 0-200 ரூ.3.50 (ரூ.30); 201-500 ரூ. 4.60 (ரூ. 4); 501-க்கு மேல் ரூ. 6.60 (ரூ.5.75).
 
    அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்- ஒரு யூனிட் ரூ.5.75 (ரூ. 5). தனியார் கல்வி நிறுவனங்கள் ஒரு யூனிட் ரூ. 7.50 (ரூ. 6.50). கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள்-ஒரு யூனிட் ரூ. 5.75 (ரூ. 5 ).
 
         காட்டேஜ்கள், குறு நிறுவனங்கள்: 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட் ரூ. 4 (ரூ. 3.50); 500 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட் ரூ. 4.60 (ரூ. 4). விசைத்தறி நிறுவனங்கள்- 2 மாதங்களுக்கு 0-500 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட் ரூ. 5.20 (ரூ. 4); 501-1000 யூனிட்டுகள் வரை ஒரு யூனிட் ரூ. 5.75 (ரூ. 5).
 
 தொழில் நிறுவனங்கள்- ஒரு யூனிட் ரூ. 7.22 (ரூ. 5.50). வர்த்தக ரீதியிலான மின் பயன்பாடு-2 மாதங்களுக்கு 100 யூனிட் வரை ஒரு யூனிட் ரூ. 4.95 (ரூ. 4.30); 100 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட் ரூ. 8.05 (ரூ. 7).
 
கட்டுமானம் போன்ற தாற்காலிக மின் இணைப்புகள்: ஒரு யூனிட் ரூ. 12.10 (ரூ. 10.50).
 
          குடிசை வீடுகள், விவசாய பயன்பாட்டுக்கான மின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ள போதிலும், அவற்றுக்கான மின் பயன்பாட்டு கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொண்டு, மானியமாக மின் வாரியத்துக்கு அளித்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
          உயர் அழுத்த பயன்பாட்டு உத்தேச உயர்வுக் கட்டணம் (தற்போதையக் கட்டணம்): தொழில் நிறுவனங்கள்: ரூ. 7.22 (ரூ. 5.50); ரயில்வே- ரூ. 7.22 (ரூ. 5.50); அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்- ரூ. 7.22 (ரூ. 4.50); தனியார் கல்வி நிறுவனங்கள் ரூ. 7.22 (ரூ. 5.50); வர்த்தக பயன்பாடு- ரூ. 8.05 (ரூ. 7); தாற்காலிக பயன்பாடு ரூ.11 (ரூ. 9).
 
மின் வாரியத்துக்கு ரூ. 6,854 கோடி இழப்பு
 
        தமிழ்நாடு மின் வாரியத்துக்கு 2014-15 ஆம் ஆண்டுக்கான வருவாய் தேவை ரூ. 39,818 கோடியாகும். ஆனால், மின் வாரியத்தின் வருவாய் ரூ. 32,964 கோடி அளவிலேயே உள்ளது. இதனால் ரூ. 6,854 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச உயர்வுக் கட்டணம் மூலம், மின் வாரியத்துக்கு ரூ. 6,805 கோடி அளவுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

        எனினும், மின் வாரியத்துக்கு நிகழாண்டில் ரூ. 49 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
1 Comments:

  1. மின்சாரம் இலவசமாக சிறு,குறு விவசாய்த்திற்கும், குடிசை வீட்டிலுளளோர்களுக்கு ஒரு குழிழ் விளக்குக்கு என கொடுப்பதில் , இலவச மிக்சி, கிரைடர், மின்விசிறியும் கொடுத்து மின்சாரம் கொடுத்தும், அரசியல் விழாக்களுக்கு மின்சாரத்தை இலவசமாக கொக்கி போட்டு எடுத்தும் (எழுதப்படாதவிதி) மின்கழிவு மூலமாகவும் , குறைந்த மின அழுத்த கனெஷ்சன் பெற்று மினரல் வாட்டர் அங்கீகாரமின்ரி எடுப்ப்தும், அரசு அலுவலகங்களில் குளிர்சாதன் வசதி ஏற்ப்டுத்தியும் , காலை 10.00வரை வீதிவிள்க்குகளை எரியவைப்பதும், கண்னை மூடி கண்காணிப்பதும், போன்ற எண்ணற்ற செயல்களால் தான் இழ்ப்பு ஏறப்டுகிறதே த்விர , மின்பில்லுடன் வரியும் சேந்த்து வசூலித்தும் குறைப்டுவதற்கு எங்கேயோ ஒட்டை உள்ளதை நிறைவு செய்தாலும், மின்சாரத்துறைக்கே சொந்த இடமிருந்தும் மாதம் 10000,15000 ரூபா வாடகைகட்டிடத்தில் இயஙுகுவதாலும் தான் நஷ்டம் வருகிறது. இதை ஆராய்ந்தால் மின்நுகர்வோர்க்க்கு இன்னும் குறைந்த அள்வில் கட்டணத்தை குறைக்க முடியும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive