தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்....

              தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
புத்தகங்கள் வாங்குவதற்கு, பிளஸ் 1 முதல் முதுகலைப் பட்டம் வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாட நூலுக்கான நிதியுதவி அளிக்கப்படும். பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், பட்டதாரி ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய கல்விகளின் பட்ட மேற்படிப்பு, பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
தொழிற்பயிற்சி கல்வி, மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை, பொதுத் தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை அளிக்கப்படும். இந்தத் திட்டங்கள் தொழிலாளர் நல நிதி செலுத்தும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். நலத் திட்டங்கள் தொடர்பான விவரங்கள், விண்ணப்பங்களுக்கு செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்.718, தேனாம்பேட்டை, சென்னை.6 என்ற முகவரிக்கு சுய விலாசமிட்ட தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் தொடர்புக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive